வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த ஆர்வமும் இல்லை: அரசியல் நிலைப்பாடு குறித்து அஜித்

DIN | Published: 22nd January 2019 01:40 AM


நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். 
அஜித்தின் ரசிகர்கள் ஆங்காங்கே பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக வந்து கொண்டிருக்கும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் அஜித் தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். 
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களிலோ அரசியல் சாயம் வந்து விடக் கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்தது. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது என்பதை புரிந்து வைத்திருப்பதே இதற்கு காரணம். 
சில வருடங்களுக்கு முன்பு என் ரசிகர் மன்றங்களை கலைத்ததும் இதன் பின்னணிதான். என் சார்ந்தவர்களின் மீது அரசியல் சாயம் வந்து விடக் கூடாது என்பதற்காக எடுத்த சீரிய முடிவு அது. 
இந்த முடிவுக்கு பின்னரும்கூட சில அரசியல் நிகழ்வுகளை சம்பந்தப்படுத்தி என்னையும், என் ரசிகர்கள் பெயரையும் பயன்படுத்தி ஒரு சில செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. 
சராசரி பொது ஜனம்: இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்து விட்டதோ, என்ற ஐயப்பாட்டை பொதுமக்களிடையே விதைக்கும். நேரடியாகவோ மறைமுகமாகவோ, அரசியல் ஈடுபாட்டில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவளியுங்கள்.. வாக்களியுங்கள் என்று நிர்பந்திப்பது இல்லை. நிர்பந்திக்கவும் மாட்டேன். 
அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. அதை யார் மீதும் திணிப்பதில்லை. மற்றவர்களின் கருத்தை என் மீது திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடமும் இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். 
எனக்கு உங்களின் அன்பு: மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழிலில் தனது பணிகளை சரியாக செய்வதையும்தான் நான் ரசிகர்களிடம் எதிர்பார்க்கிறேன். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, குடும்பத்தை பாதுகாப்பது, உடல் நலனில் அக்கறையாக இருப்பது மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவது ஆகியவையும்தான். அதுதான் நீங்கள் எனக்கு செய்யும் அன்பு. வாழு வாழ விடு என்று தெரிவித்துள்ளார் நடிகர் அஜித்.
 

More from the section

இனி மாற்றம், முன்னேற்றம் வராது; மாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மட்டுமே வரும்: ஸ்டாலின் விமர்சனம்
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று தமிழகம் வருகை
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்ரவரி 24 முதல் விருப்பமனு விநியோகம்: விஜயகாந்த்
மெகா கூட்டணியை கண்டு திமுக கதிகலங்கி உள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்
ஸ்ரீபெரும்பதூர் அருகே சவிதா மருத்துவ கல்லூரி விடுதியில் திடீர் தீ விபத்து