சனிக்கிழமை 20 ஜூலை 2019

தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019ன் சுருக்கம் - தமிழில்! 

DIN | Published: 04th July 2019 05:44 PM

 

தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019ன் சுருக்கம் தமிழில் வெளியாகியுள்ளது. இதுவரை ஆங்கிலத்தில் இருந்த இந்த வரைவு தற்போது தமிழில் வெளியாகியிருந்தாலும், அது போதாது என்கிறார் சமூக செயற்பாட்டாளர் உமாநாத் விழியன்.

இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது, தேசிய கல்விக் கொள்கையை தமிழில் சுருக்கமாக மத்திய மனிதவள அமைச்சகம் வெளியிட்டு இருக்கின்றது. இதற்கு நன்றி தெரிவிக்கும் அதே சமயத்தில் வெறும் முக்கிய புள்ளிகளை மட்டுமே கொடுத்திருப்பது ஏமாற்று வேலையோ என்றும் தோன்றுகின்றது. 

முழு வரைவில் ஒரு விஷயத்தை செய்யும் போது ஏன் செய்கின்றார்கள், அதனை செய்வதால் எதனை எட்டமுடியும் அதிலிருக்கும் சிக்கல்கள் என்ன என்று இருக்கின்றது. ஆனால் இந்த சுருக்கத்தில் அவை எதுவுமே இல்லை. எதை அமல்படுத்த இந்த கொள்கை வலியுறுத்துகின்றது என்பதனை மட்டுமே சொல்கின்றது. சுருக்கத்தில் அது தான் சாத்தியம் என்றாலும் நிச்சயம் இது போதாது. கொள்கையை பற்றி விவாதித்து கருத்து கூற ஆறு மாதம் கேட்டதற்கு எப்படி போனால் போகட்டும் என ஒரு மாதம் கொடுத்தார்களோ அதேப் போல போனால் போகட்டும் என சுருக்கத்தை கொடுத்துள்ளார்கள்.

இது நிச்சயமாக போதாது என்று பதிவிட்டுள்ளார்.

நீங்கள் தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019ன் சுருக்கத்தில் தமிழல் காணலாம். www.mhrd.gov.in என்ற இணையதளத்தின் மூலம்.
 

More from the section

கோதாவரி - காவிரியை இணைக்க, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
நீட் வந்த பிறகு அகரம் மூலமாக ஒரு அரசுப் பள்ளி மாணவரைக் கூட மருத்துவராக்க முடியவில்லை: சூர்யா வேதனை!
நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு
விடுதலை வீரர் அர்த்தநாரீச வர்மாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்
அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்துக்கு ஏற்றதல்ல: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் ஸ்டாலின்