சனிக்கிழமை 20 ஜூலை 2019

குற்றாலத்தில் மிதமான சாரல்: அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

DIN | Published: 10th July 2019 01:51 AM
குற்றாலம் பேரருவியில் குளிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்துநிற்கும் சுற்றுலாப் பயணிகள்.


திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாள்களாக இதமான சூழலுடன் சாரல் மழை பெய்வதால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
குற்றாலத்தில் நிகழாண்டில் சீசன் தொடங்கியது முதல் அருவிகளில் தண்ணீர்வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. 
இந்நிலையில் கடந்த சில நாள்களாக குற்றாலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன்,  அவ்வப்போது மிதமான சாரல் மழையும், குளிர்ந்த காற்றும் வீசுகிறது. தற்போது பெய்து வரும் மிதமான சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

 

More from the section

அரசு விழாக்களில் எம்.எல்.ஏ.க்களை அழைக்க வேண்டும்: பேரவைத் தலைவர்
10, 11, 12-ஆம்  வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்களும் தமிழில் வெளியிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
ஆண்டாள் கிளியுடன் நீலப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்
தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை அதிகரித்துள்ளது கர்நாடகா