செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

காஞ்சிபுரம் வந்தார், அத்திவரதரை தரிசித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

DIN | Published: 12th July 2019 05:48 PM


காஞ்சிபுரம்: குடும்பத்துடன் காஞ்சிபுரம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அத்திவரதரை தரிசனம் செய்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் உடன் வந்தார்.

அத்திவரதரை தரிசிக்க இன்று பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இவரது வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் சென்றார். அங்கு மாலை 3 மணியளவில் அத்திவரதரை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அத்திவரதரை தரிசிக்க வெள்ளிக்கிழமை வழக்கம் போல் காலை 5 மணிக்கு கிழக்கு கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, நண்பகல் 12.30 மணியளவில் கிழக்கு கோபுரம் வழியாக பொதுதரிசனம், முக்கியஸ்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவில் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அவர் குடும்பத்துடன் அத்திவரதரை தரிசனம் செய்தார்.

குடியரசுத்தலைவர் புறப்பட்ட பிறகு வழக்கம் போல் மாலை 4.30 மணியிலிருந்து பொதுமக்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
 

More from the section

கவனக்குறைவால் பயங்கரம்: ஒரே பைக்கில் சென்ற இரண்டு பெண்கள் பலி; ஒருவர் படுகாயம்
சென்னை நந்தனத்தில் இரு சக்கர வாகனம் மீது மாநகர அரசு பேருந்து மோதி 2 பேர் பலி 
ரூ.18 லட்சம் நிதி முறைகேடு புகார்: ஆவின் பொது மேலாளர் பணியிடை நீக்கம்
காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழா தொடங்கியது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!