சனிக்கிழமை 20 ஜூலை 2019

பழைய குற்றால அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN | Published: 26th June 2019 12:41 AM


திருநெல்வேலி மாவட்டம், பழைய குற்றாலத்தில் உள்ள அருவியில் விழும் மிதமான தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் கடந்த சில  நாள்களாக  தண்ணீர்வரத்து அதிகரித்து, தற்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து வருகின்றனர். ஆனால், பழைய குற்றாலம் அருவியில் மிகவும் தாமதமாகவே தண்ணீர் விழத்தொடங்கியது. மிகவும் குறைந்த அளவிலேயே தண்ணீர் விழுந்ததால்,  சுற்றுலாப் பயணிகளின் வருகையும் மிகக் குறைவாகவே இருந்தது. இந்நிலையில், கடந்த இரு நாள்களாக பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து, இந்த அருவிக்கும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
 

More from the section

அரசு விழாக்களில் எம்.எல்.ஏ.க்களை அழைக்க வேண்டும்: பேரவைத் தலைவர்
10, 11, 12-ஆம்  வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்களும் தமிழில் வெளியிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
ஆண்டாள் கிளியுடன் நீலப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்
தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை அதிகரித்துள்ளது கர்நாடகா