புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

அரவக்குறிச்சி சுங்கச்சாவடியில் 5.63 கிலோ தங்க நகைகள் பறிமுதல் 

DIN | Published: 19th March 2019 07:54 AM

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகனச் சோதனையில் 5.63 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் உள்ள நகைக்கடைக்கு நகைகளை வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5.63 கோடி மதிப்பிலான தங்க நகைகளை  பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அதேபோன்று மதுரையில் வேனில் எடுத்து வரப்பட்ட ரூ.3.64 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்தனர் பறக்கும்படை அதிகாரிகள். அவர்களிடம் உள்ள ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.

நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலைத்தில் 4.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

More from the section

கோவையில் பலாத்காரக் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு
பச்சையப்பன் கல்லூரி முதல்வர் என். சேட்டு நியமனத்தை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
புயல் தமிழகத்தில் கரையைக் கடக்குமா? கரையை ஒட்டிச் செல்லுமா? ஓரிரு நாளில் தெரியும்!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: போலீஸ் கேட்ட விவரங்களை வெளியிட வாட்ஸ்ஆப் மறுப்பு
குமரி: கோதையாறு நீர் மின்நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் தற்கொலை