21 ஏப்ரல் 2019

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா?

DIN | Published: 19th March 2019 07:45 AM


சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.75.59 ஆகவும், டீசல் லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.70.59 ஆகவும் உள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இடையில் சில தினங்கள் குறையத் தொடங்கியது. சில தினங்காக குறைந்தும், அதிகரித்தும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில், பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.75.59 ஆகவும், டீசல் லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.70.59 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

More from the section

சுட்டெரிக்கும் கோடையால் அதிகரித்த நுங்கு விற்பனை!
4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நாளை வேட்புமனு தொடக்கம்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி வேள்வி பூஜை
நீர்வரத்து அதிகரிப்பு: கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் தடை
தென்காசி, குற்றாலம் பகுதிகளில் திடீர் மழை: பேரருவியில் தண்ணீர்