வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

கன்னியாகுமரியில்  பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

DIN | Published: 23rd March 2019 01:33 AM
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட  மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் மு.வடநேரேவிடம் மனுத் தாக்கல் செய்கிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.


கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான, மத்திய நிதி, கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
மாவட்ட ஆட்சியரும், தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரசாந்த் மு.வடநேரேவிடம், பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்   தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 
அவருடன் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ், குமரி மாவட்ட பாஜக தலைவர் முத்துகிருஷ்ணன், தேமுதிக மாவட்டச் செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
முன்னதாக பொன்.ராதாகிருஷ்ணன் தனது அலுவலகத்தில் இருந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாகப் புறப்பட்டார். அவருடன்,  அதிமுக மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (குமரி கிழக்கு), ஜான் தங்கம் (குமரி மேற்கு), தோவாளை ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணகுமார், நாகர்கோவில் நகர அதிமுக செயலாளர் சந்துரு, பாஜக மாவட்டத் துணைத் தலைவர் முத்துராமன், மேலிடப் பார்வையாளர் தேவ், பாமக மாநிலத் துணைத் தலைவர் ஹில்மென் புரூஸ் உள்ளிட்ட  கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
மேலும் மூவர்: மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் எபனேசர், தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சியின் சார்பில் தங்கப்பன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜெயின்டீன் ஆகியோரும் வெள்ளிக்கிழமை தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.


 

More from the section

80-ஆவது வயதில் முதன்முதலாக வாக்களித்த முதியவர்
முதுகுளத்தூரில் இறந்ததாகக் கூறப்பட்டவர் வாக்களிக்க வந்ததால் பரபரப்பு
ராஜபாளையத்தில் பெரியார் சிலை மீது காவி வண்ணம் பூசியதால் பதற்றம்
மக்களவைத் தேர்தல் எதிரொலி: வெறிச்சோடியது குமரி
பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்