திங்கள்கிழமை 24 ஜூன் 2019

கோவையில் கமல் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் தடுத்து நிறுத்தம் 

DIN | Published: 24th March 2019 02:36 PM

 

சிங்காநல்லூர்: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை தலைவர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் கட்சியின் தேர்தல் அறிக்கையினை ஞாயிறு அன்று (24.03.19) கோவையில் வெளியிடுவேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் தடுத்து நிறுத்தபட்டுள்ளது.

ஞாயிறு காலை கோவை வந்த கமல்ஹாசன் சிங்காநல்லூர் அருகே உள்ள ராமநாதபுரம் என்னும் இடத்தில் கட்சியினரின் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் அந்த கூட்டத்தை தடுத்து நிறுத்தினர்.

முறையான அனுமதியின்றி நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறி தேர்தல் பறக்கும் படையினர் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

இதன் காரணமாக அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Tags : tamilnadu lok sabha elections MNM kamal coimbatore review meeting election flying squad cancellation

More from the section

நாசகாரத் திட்டங்களுக்கு எதிராகக் கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம்: சீமான் வலியுறுத்தல் 
காஞ்சிபுரத்தில் 48 நாட்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரம் மாற்றம்!
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும்
கோவையில் பெற்றோருடன் உறங்கிய சிறுமிக்கு நேர்ந்த கதி: கிணற்றில் பிணமாக மீட்பு
நிலத்தடி நீரை எடுக்க எத்தனை லாரிகளுக்கு அனுமதி? 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி