சனிக்கிழமை 23 மார்ச் 2019

சிரி... சிரி... சிரி... சிரி... 

DIN | Published: 17th February 2019 12:00 AM

""உங்க செக் புக் தொலைஞ்சிருச்சுன்னு சொல்றீங்க... வேறு யாராவது செக்கில
 கையெழுத்துப் போட்டுப் பணம்  எடுத்திட சான்ஸ் உண்டா?''
""வேற யாரும் கையெழுத்துப் போட முடியாது. ஏன்னா எல்லாச் செக்கிலேயும் நானே கையெழுத்துப் போட்டு வச்சிருந்தேன்''

எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிபட்டி.

 

""ஜெயில்ல நடந்த ஓட்டப் பந்தயத்துல கைதிங்க யாரும் கலந்துக்கலையாமே, ஏன்?''
""சுவர் ஏறி குதித்து ஓடக் கூடாதுன்னு சொன்னாங்களாம்''

அ.செல்வகுமார், சென்னை-19.

 

""அடுத்த மூணு மாசத்துக்கு நம்ம மன்னர் நிம்மதியா இருப்பாரா? எப்படி?''
""அக்கம்பக்கத்து நாட்டு அரசர்களுக்கெல்லாம் இவருடைய மெடிக்கல் லீவு
சர்டிபிக்கேட்டை அனுப்பி வைச்சிட்டாரே''

கு.அருணாசலம், தென்காசி.

 

""வீடு கட்ட லோன் வாங்கினீங்களே...கட்டிட்டீங்களா?''
""லோனைக் கேட்குறீங்களா? வீட்டைக் கேட்குறீங்களா?''

ஆர்.நந்தினி, வந்தவாசி.""கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலைன்னுதான் சொல்வாங்க. நீங்க என்னன்னா கண்ணுக்கு எட்டினது காலுக்கு எட்டலைன்னு புதுசா சொல்றீங்க?''

""கல்யாண மண்டபத்துல அருமையான ஜோடி செருப்பைப் பார்த்து வச்சிருந்தேன்.

போய்  கால்ல மாட்டிக்கலாம்ன்னு கிட்டே போறதுக்குள்ளே வேற யாரோ ஆட்டையப் போட்டுட்டாங்களே''

வி.ரேவதி, தஞ்சாவூர்.

 

""ஜல்லிக்கட்டுக்குப் போகாம புறக்கணித்த தலைவர் ரொம்ப புத்திசாலின்னு ஏன் சொல்றே?''
""இளைய காளையரை எல்லாம் அடக்கியவரேன்னு அவரைப் புகழ்ந்து சொல்லி,  காளை எதையாவது அடக்கச் சொல்லிடுவாங்கன்னுதான் அவர் போகலை''

குணா, புவனகிரி.""எதுக்குடா கால்குலேட்டருடன் அந்த பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டிருக்கே?''
""கணக்குப் பண்ணிக்கிட்டிருக்கேன்''

சி.ரகுபதி, போளூர்.

 

""இந்த பல் டாக்டர் ரொம்ப பலவீனமா இருக்காரு''
""எப்படிச் சொல்றே?''
""ஒரு பல்லைப் பிடுங்குறதுக்கு மூணு நாளா திணறிக்கிட்டு இருக்காரு''

ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

More from the section

மனக்கதவு
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நோய்களுக்கெல்லாம் அரசர்!
சிரி... சிரி... சிரி... சிரி... 
செஃப் இயக்கிய படம்!
இளம்  வயது  அமைச்சர்