வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

படைப்பாளியின் பெயர் மாறிவந்த திரைப்படம்!

DIN | Published: 22nd January 2019 12:12 PM

டி.ஆர்.ராமண்ணா தயாரிப்பில் வெளிவந்த படம் "குலேபகாவலி' , எம்.ஜி.ஆர். நடித்த கறுப்பு வெள்ளை படத்திற்கு விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசை அமைத்து இருந்தனர். எம்.ஜி.ஆருடன் ஜோடியாக டி.ஆர்.ராஜகுமாரி உள்ளிட்ட மூன்று கதாநாயகிகள் நடித்துள்ள இந்தப் படத்தில் ஏ.எம்.ராஜா - ஜிக்கி பாடிய மென்மையான பாடல் "மயக்கும் மாலை பொழுதே...' என்ற பாடல். இந்த பாடலுக்கு இசையமைத்தவர் கே.வி.மகாதேவன் இந்தப் பாடலை பயன்படுத்தி கொள்ள எம்.எஸ்.விக்கு இசைவு தெரிவித்து இருந்தார். டைட்டிலில் அவர் பெயர் போட கேட்டபோது, "என் பெயர் போட வேண்டாம். உங்களது படைப்பாகவே இருக்கட்டும்'' என்று பெருந்தன்மையோடு கே.வி.மகாதேவன் கூறியதாக எம்.எஸ்.வி. டி.வி. நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
 கேட்டவர்:
 பி.துரை, காட்பாடி.
 

More from the section

நகைச்சுவையும் ஓவியங்களும்!
இரண்டு சிங்கங்கள்
மிகப்பெரிய  கோயில்  விளக்கு!
தேன்காரிகளின் ரீங்காரங்கள்
சிரி... சிரி... சிரி... சிரி...