புதன்கிழமை 17 ஜூலை 2019

சிரி... சிரி... சிரி... சிரி... 

DIN | Published: 07th July 2019 02:56 PM

 

""கிளினிக் உள்ளே என்ன சத்தம்?''
"" டாக்டர் பல்லைப் புடுங்குறார்''
""திரும்ப, அய்யோ அம்மான்னு சத்தம் கேட்குதே?''
"" இப்ப பர்சைப் புடுங்குறாராம்''

ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

 

""அமைச்சரே... என்ன அவசரமா ஓடி வருகிறீர்?''
""மன்னா நமது பட்டத்து யானை மலர் மாலையை யாரோ ஒரு  பிச்சைக்காரி கழுத்திலே போட்டுவிட்டது''
""நாசமாப் போச்சு...  பிச்சைக்காரி  வேஷத்துல நகர்வலம் போயிருப்பது நமது மகாராணி அமைச்சரே''


""அந்த சாமியார் சொன்னதுபோல நாம் ஐந்து புலன்களையும் அடக்கி ஆண்டா என்ன வரும்?''
""நம்மைக் கொண்டு போக 108 ஆம்புலன்ஸ் வரும்''


ஆசிரியர்: எதுக்குடா ஸ்கூலுக்கு எருமை மாட்டை கூட்டிக்கிட்டு வந்துருக்கே?
மாணவன்: நீங்கதானே சார் சொன்னீங்க... உனக்குப் பாடம் நடத்துறதுக்குப் பதிலா எருமை மாட்டுக்குப் பாடம் நடத்தலாம்ன்னு

கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.


டாக்டர்: ஏன்யா ஊசி குத்துறதுக்கு முந்தியே நான் பேஷண்ட் இல்லை... கூட வந்தவன்னு சொல்ல வேண்டியதுதானேய்யா?
வந்தவர்:  சொல்ல வாயெடுத்த என்னைத்தான்  குறுக்கே எதுவும் பேசக்கூடாதுன்னு நீங்கதான் அடக்கிட்டீங்களே டாக்டர்.


(தந்தை தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையிடம்)
""மரியாதையா கண்ணை மூடித் தூங்கப் போறியா... இல்லை உங்கம்மாவை விட்டு பாடச் சொல்லவா?''

வி.ரேவதி, தஞ்சை.

 

""வாய்விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்னு சொல்றாங்களேன்னு வாய்விட்டுச் சிரிச்சேன்.
எங்க வீட்டு நாய் விட்டுட்டுப் போயிடுச்சுங்களே?''
"" காலையிலே பல்லு விளக்காம சிரிச்சிருப்பீங்க''

ஆர்.சண்முகராஜ், சென்னை-19.

 

""எதுக்கு உங்க கதையிலே முட்டைக்கடைக்காரனைப் பத்தியே அதிகமாச் சொல்றீங்க?''
"" கதையிலே கரு  இல்லைன்னு யாரும் சொல்லக் கூடாது பாருங்க... அதான்''

ஆர்.நந்தினி, வந்தவாசி.

More from the section

வறண்ட விதர்பாவில் பேரீச்சம் பழ புரட்சி!
700 நெல் வகைகள்!
சொன்னால் நம்பமாட்டீர்கள்!
திரைக் கதிர்
பேல்பூரி