புதன்கிழமை 17 ஜூலை 2019

தெரியுமா?

DIN | Published: 07th July 2019 02:53 PM

 


ஒருமுறை  திருச்செங்கோடு  காந்தி ஆசிரமத்துக்கு  வருகை தந்தார் கஸ்தூரி பாய் காந்தி,  அங்கே  கைத்தறித் துணிகளுக்கு சாயம் போடும்  வேலையை  ஆசிரமத்தைச் சேர்ந்த  தொண்டர்கள்   செய்து கொண்டிருந்தனர். 

ஒரு துணியை  எடுத்துப் பார்த்த  கஸ்தூரிபாய்  அருகில்  இருந்த ராஜாஜியிடம் அந்த துணியை  காட்டி, "திஸ் கலர் கோ?'  அதாவது  "இந்த துணி சாயம் போகுமா?' என்று  தனக்கு தெரிந்த  கொச்சை ஆங்கிலத்தில்  கேட்டார்.  அதற்கு மற்றவர்கள்  எல்லோரும்  சிரித்தனர்.

ராஜாஜி  அமைதியாக,  "திஸ் கலர்  நோ கோ' என்றார்.

மீண்டும் சிரிப்பொலி.

கஸ்தூரி பாய்  சற்று  வெட்கத்துடன்,  ""நான் பேசிய  ஆங்கிலம்  தவறா?''  என்று ராஜாஜியிடம்  கேட்டார்.

அதற்கு  ராஜாஜி,  ""நீங்கள்  பேசியது  எளிமையான  ஆங்கிலம்.  அது குழந்தைகளுக்கு  கூடப் புரியும்'' என்றார்.

 பி.பாலாஜி கணேஷ்,  கோவிலாம்பூண்டி.

 

 


*    ராகுல் காந்தியின் ஒன்றுவிட்ட  சகோதரர் வருண்காந்தி. எதிர் எதிர் கட்சிகளின்  எம்.பி.களாக  இருந்தாலும்  இவர்களிடையே  ஓர் ஒற்றுமை  உண்டு. இருவரும்  நன்றாக  செஸ்  ஆடுவார்கள். 

 

* நாடாளுமன்ற  உறுப்பினரான  கிரண்கெர்  முன்னாள்  நடிகை மற்றும் பேட்மின்டன்  வீராங்கனை.பல்கலைக்கழகம்,  மாநிலம் மற்றும்  நாட்டிற்காக  பல போட்டிகளில்  பங்கு  கொண்டு வென்றுள்ளார்.

 - ராஜிராதா, பெங்களூரு.
 

More from the section

வறண்ட விதர்பாவில் பேரீச்சம் பழ புரட்சி!
700 நெல் வகைகள்!
சொன்னால் நம்பமாட்டீர்கள்!
திரைக் கதிர்
பேல்பூரி