திங்கள்கிழமை 17 ஜூன் 2019

மூழ்கத் தயாராகும் நகரங்கள்!

By - ராஜிராதா.| DIN | Published: 09th June 2019 02:16 PM

 

கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகா

கிரீன்லாந்து மற்றும்  அண்டார்டிகா  பகுதிகளில்  உள்ள பனிப்பாறைகள், பனித்தகடுகள் எதிர்பார்த்ததை  விட வேகமாக  உருகுகின்றன. இதன் விளைவு 21-ஆம் நூற்றாண்டில்  கடல் மட்டம்  2 மீட்டர்  வரை உயரும்.  இதனால்  பூமியின் தரைப்பகுதி 1.79 மில்லியன்  சதுர கிலோ மீட்டர்  வாழ லாயக்கற்றதாக  மாறும். இதனால்  187  மில்லியன் மக்கள்  தங்கள் இடத்தைவிட்டு  வெளியேற வேண்டி வரும். 

நைஜீரியா:

நைஜீரியாவில்  லாகோஸில்  அடிக்கடி வெள்ளம் ஏற்படுவது  சகஜம்.  காரணம், இந்த நகரில்  டிரைனேஜ்  சிஸ்டம்  சரி கிடையாது. இந்தப் பகுதியில்  கடல் மட்டம் 20 செ.மீட்டர்  உயர்ந்தால், 7, 40,000 பேர்  தங்களது வீட்டை  இழக்க வேண்டிய  நிலை வரும்.

மாலத்தீவு: 

கடல் மட்டத்திற்கு  கீழ் உள்ள  நாடுகளில்  மாலத்தீவும் ஒன்று.  இதன் தலைநகர் மாலேயின் ஜனத்தொகை 1,43,000.  இங்கு நீர் மட்டம்  உயர்ந்து  வருவதால்,  தன் மக்களை,  வெளிநாடுகளில்  இடம் வாங்கி  அங்கு குடியேற்றலாமா  என மாலத்தீவு  அரசு யோசித்து  வருகிறது. 

இந்தியா:

இந்தியாவில், மும்பையில்  கடல் மட்டம்  அடுத்த 50 ஆண்டுகளில்  0.5 மீட்டர் வரை உயர்ந்தால்,  நகரின்  பல இடங்கள் தண்ணீரில்  மிதக்கும்  என கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கா: 

அமெரிக்காவின்  நியூ ஆர்லியன்ஸ்  பகுதி  கடும்  சூறாவளிகளையும், புயல்களையும் சந்தித்து  வரும் பூமி.  இங்கு நீர் மட்டம் 1.5 மீட்டர் உயர்ந்தால்   இந்த ஊரே நீரில் மூழ்கும். இதனால் ஒரு நாள்  வாழவே  இயலாத  நிலை வரலாம். சுமார் 1.2  மில்லியன் ஜனத் தொகை தங்கள்  இருப்பிடத்தைவிட்டு  இடம் பெயர வேண்டிவரும்.

மேலே குறிப்பிட்ட  நாடுகள் மட்டும்தான் பாதிக்கப்படுமா என்றால்  இல்லை. உலகின் பல ஆயிரம் தீவுகள்  வருங்காலத்தில்  காணாமல் போகும் நிலையில்தான் உள்ளன.  மேலும், மக்கள்  தாங்கள் வசிக்கும் ஊரிலிருந்து இடம் பெயர்ந்து வேறு ஊர்களுக்கு செல்லும்போது, பல நாடுகளிடையே  பகை அதிகரிக்கலாம். 

More from the section

மைக்ரோ கதை
பேல்பூரி
சொன்னால் நம்பமாட்டீர்கள்! 33
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குழந்தைகளின் உடல், மன வலிமை!
குறுந்தகவல்கள்