புதன்கிழமை 23 ஜனவரி 2019

பைலட்டாக பறந்த காஜல்

DIN | Published: 14th October 2018 10:00 AM

நடிகைகளில் சிலர் நடிப்பு தவிர சாகசங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர். பஞ்சி ஜப்பிங் விளையாட்டு, கடலுக்கு அடியில் நீந்துதல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.  
நடிகை காஜல் அகர்வாலும் சாகசங்கள் செய்வதில் ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் அவர் விமான பைலட்டாக மாறி விமானத்தை வானில் ஓட்டிச் சென்றார்.  அந்த அனுபவம் பற்றி பதிந்துள்ள பதிவு...  
""ஒருமுறை எனது நண்பர்களுடன் நான் கோலாலம்பூர் சென்றிருந்தேன்.  அங்கு தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்தேன்.  அதுவொரு சிறப்பு விமானம்.  4 பேர்கள் மட்டுமே அமர முடியும்.  விமான பைலட்  அருகில் நானும் அமர்ந்து கொண்டேன். விமானத்தை நான் இயக்க வேண்டும் என்று அவரிடம் தெரிவித்தேன்.  உடனே அவர் அதற்கான வழிமுறைகளைச் சொல்லித் தந்து உதவினார்.  அன்றைக்கு வித்தியாசமான விமான பயணத்தை நான் உணர்ந்தேன்.  அது மிகவும் த்ரில்லான அனுபவம்.  சாதனைகள் செய்வது என்பது எனக்கு பிடித்தமானது.  அன்றைக்கு என்னுடன் நண்பர்களும் இருந்ததால் கூடுதல் தைரியத்துடன் இருந்தேன்'' என்று தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.

More from the section

உடல் ஆரோக்கியமும், மன வளர்ச்சியும் அதிகரிக்கும்!
தினம்  ஒரு  மொழி  பேச...!
ரேஸ் பைக் சாம்பியன்!
தமிழ் சினிமா 2018
இசை தூறல்கள்!