புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

குறும்பட இயக்குநர்களுக்கு சூர்யா அறிவுரை

Published: 11th September 2018 10:13 AM

வெள்ளித்திரையில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு குறும்பட அனுபவங்கள் திறந்து விட்டுள்ள கதவுகள் ஏராளம்.
 அந்தவிதமாக மூவி பப்பர்ஸ்டகிளாப் குறும்பட இயக்குநர்களுக்கு சிறந்த மேடையே உருவாக்கி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் சீசன் 2 குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 "கல்கி' என்ற குறும்படத்தை இயக்கிய விஷ்ணு இடவன் முதல் பரிசாக ரூ.3 லட்சம் பெறுகிறார். அவருக்கு சூர்யாவின் 2 டி நிறுவனத்தில் கதை சொல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்ததாக, "கம்பளிப்பூச்சி' இயக்குநர் வி.ஜி.பாலசுப்ரமணியன்,
 "பேரார்வம்' குறும்படத்திற்காக சாரங் தியாகு, "மயிர்' குறும்படத்தை இயக்கிய யோகி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பெற்றனர். விழாவில் பங்கேற்று பரிசுகளை வழங்கிய நடிகர் சூர்யா பேசுகையில்...
 "ஒரு படம் எடுப்பது சுலபம். ஆனால் நல்லபடம் எடுப்பது போருக்கு செல்வது மாதிரி. குறும்படங்கள் என்றாலும் அதில் சிறிய குறை கூட வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் வாழ் நாளையும் தாண்டி இதுதான் உங்களுக்கான முக்கியமான பதிவாக இருக்கப்போகிறது.
 பள்ளிக்கூடம், இந்த சமூகம் சொல்லி கேட்காதவர்கள் சினிமா பார்த்து திருந்தினேன் என்று சொன்னால் அதுதான் சினிமாவின் பலம்.. இதில் பாலும் விற்கலாம் கள்ளும் விற்கலாம்.. இரண்டுமே விலைபோகும்.. ஆனால் எதை விற்கவேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்'' என்றார் சூர்யா.

More from the section

எம்ஜிஆரின் கண் கண்ட கடவுள்!
சிந்தை கவர்ந்த  திருவிழாக்கள் 55: கராட்சு குன்சி மிதவைகள் திருவிழா
என்றும் இருப்பவர்கள்! - 3. கு.அழகிரிசாமி
சீன- தமிழர் உறவு: கல்வெட்டு சொல்லும் உண்மைகள்!
பயணங்களில் அபூர்வம் நிகழ்கிறது!