புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

ஜானகி அம்மா வேடத்தில் ரித்விகா!

DIN | Published: 11th September 2018 10:16 AM

சாமானிய வாழ்க்கையிலிருந்து உச்சம் தொட்டு சாதனை படைத்த எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு எம்.ஜி.ஆர். என்ற பெயரிலேயே சினிமாவாகிறது. காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை "காமராஜ்' என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. எம்.ஜி.ஆரின் பிறப்பு தொடங்கி அவரின் குடும்பச் சூழல், இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து வந்து, இங்கே கும்பகோணம் ஆனையடி பள்ளியில் படித்த காலம், வறுமையால் கல்வி தடைப்பட்டு நாடகக் கம்பெனியில் சேர்ந்த தருணம்... கூட்டத்தில் ஒருவராக சினிமா நடிகர் வாழ்க்கை, அதன் பின் கதாநாயகனாக உயர்ந்து உச்சம் அடைந்த நிலை, அரசியல் தனித்துவம் வாய்ந்த தலைவர், மக்கள் செல்வாக்கு பெற்று உயர்ந்த நிலை என எம்.ஜி.ஆரின் பல்வேறு வாழ்க்கை நிகழ்வுகள் இதில் இடம் பெறவுள்ளன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்தடுத்த கட்டங்களாக நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர் வேடத்தில் விளம்பர பட புகழ் சதீஷ்குமார் நடிக்கிறார். எம்.ஆர்.ராதா வேடத்தில் பாலாசிங் நடிக்கிறார். மறைந்த கருணாநிதி, ஜெயலலிதா கதாபாத்திரங்களில் நடிக்க தேர்வு நடந்து வருகிறது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக ரித்விகா நடிக்கிறார். அ.பாலகிருஷ்ணன் தயாரித்து, இயக்குகிறார்.

More from the section

பயணங்களில் அபூர்வம் நிகழ்கிறது!
புது இசை வரவு
என் பெயர் விரைவில்..
தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு
வாரச் சந்தையில் காட்சிகள்