17 பிப்ரவரி 2019

டிக்கெட் விற்பனையில் புதிய முறை!

DIN | Published: 11th September 2018 10:14 AM

நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் படம் "கூத்தன்'. சினிமாவை பின்னணியாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் சினிமாவில் நடனமாடும் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்களது வாழ்வியல் கருவாக வைக்கப்பட்டுள்ளது. ஏ.எல். வெங்கி இப்படத்தை எழுதி இயக்குகிறார். ராஜ்குமார், ஸ்ரிஜிதா, சோனால், கீரா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். நாகேந்திர பிரசாத், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜுனியர் பாலையா உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இப்படத்துக்காக புதிதான முறையில் டிக்கெட் விற்பனை முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
 இது குறித்து தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன் பேசும் போது... சின்ன படங்கள் ஓடுவது மிகப்பெரும் சவாலாகி விட்டது. அதை மாற்றி இந்தப்படத்தை அனைவரிடமும் கொண்டு செல்லவும், இதை வெற்றிப்படமாக்கவும் டிக்கெட் முறையில் புதுமுறையை அறிமுகப்படுத்த உள்ளேன். படத்தின் டிக்கெட்டை நானே என் நண்பர்கள் மூலமாக விற்பனை செய்ய உள்ளேன். எந்த விலைக்கு வாங்கினாலும் அதிக டிக்கெட் விலையுள்ள தியேட்டருக்கு நீங்கள் சென்றாலும் இந்த டிக்கெட் செல்லும். தியேட்டர்கள் ஒத்துழைப்புடன் இதை ஆரம்பித்திருக்கிறேன். ஒரு சின்னப்படத்தை 5 லட்சம் பேர் பார்த்தால் அது ஹிட் படம். என் நண்பர்கள் மூலம் 20 லட்சம் ரூபாய் அளவு டிக்கெட்டை விற்கவுள்ளேன். இதன் மூலம் பார்வையாளர்களை நேரடியாக நாங்கள் சந்தித்து தியேட்டருக்கு அழைத்து வருவோம் என்று பேசினார் நீல்கிரிஸ் முருகன்.
 
 

More from the section

அன்பும், போராட்டமும்தான் நிரந்தரம்!
மிக மிக அவசரம்
காசியாத்திரை 2
நெஞ்சில் ஒரு ஓவியம்
இளைஞனின் சமூக கோபம்