புதன்கிழமை 17 ஜூலை 2019

சினிமாவை கற்றுக் கொண்டேன்

Published: 07th July 2019 01:21 PM


சமீப சினிமாக்களில் குறிப்பிடத்தகுந்த சினிமாவாக வெளிவந்திருக்கிறது "ஜீவி'. தொடர்பியல் விதி என்பதை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்பதன் உள்ளடக்கமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. "8 தோட்டாக்கள்' மூலம் அறிமுகமான வெற்றி, இப்படத்திலும் கவனம் ஈர்த்துள்ளார். 

""முதலில் இந்த சினிமா  நான் நினைத்த படி வந்திருப்பதில் மகிழ்ச்சி.  கதை கேட்கும் போது எப்படி இருந்ததோ அதை விட படம் பார்க்கும் போது நன்றாக இருந்தது. அதற்குக் காரணம் படத்தொகுப்பாளர்தான். படத்தொகுப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதை. அது போல் வசனம்,  படமாக்கப்பட்ட நேர்த்தி எல்லாவற்றிலும் பங்கு உண்டு. பல பிரபலங்கள் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினார்கள். அடுத்து இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். இரண்டுமே வெவ்வேறு இரு புதுப் பாத்திரங்களாக இருக்கும். இப்படங்களிலும் நாயகனாக இல்லாமல் "8 தோட்டாக்கள்' மற்றும் "ஜீவி' படங்களைப் போல கதாபாத்திரமாகவே நடிப்பேன். பொருளாதாரப் பின்னணியை விடச் சினிமா பின்னணி இருந்தால் தான் வெற்றியடைய முடியும். இந்த இரண்டு படங்கள் மூலம் ஓரளவு கற்றுக்கொண்டேன். வசனங்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநரும் எத்தனை டேக் வாங்கினாலும் கோபப்படாமல் இயக்கினார். இப்படத்திற்கான ஹிந்தி உரிமையைக் கேட்டிருக்கிறார்கள். இதுவே எங்களின் பெரும் சாதனை'' என்றார் வெற்றி. 

More from the section

அரசு பள்ளியை தரம் உயர்த்தும் இளைஞர்கள்
இசையறிஞர் ப. முத்துக்குமாரசாமி நினைவாக... இசையோடு வாழ்வு!
மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகள்!
என்றும் இருப்பவர்கள்!
சிதைவின் விளிம்பில் சித்தன்னவாசல்!