புதன்கிழமை 17 ஜூலை 2019

த்ரிஷாவின் கர்ஜனை 

Published: 07th July 2019 01:18 PM

 

த்ரிஷாவின் அடுத்த முயற்சி "கர்ஜனை'. சுந்தர் பாலு எழுதி இயக்கும் இப்படத்தில் அமித் பார்கவ், வம்சி கிருஷ்ணா, வடிவக்கரசி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.""ஒரு குற்றமும், அந்தக் குற்றத்தை செய்யத் தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். இங்கே குற்றம் என்பது நம்பிக்கை துரோகம். அந்தத் துரோகத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது.  அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசும் பொருள்.  

எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது. அப்படியோர் பாதையில்தான் இந்தக் கதை பயணமாகும். ஆக்ஷன், த்ரில்லர் என இந்தக் கதை வழக்கமான பார்வைதான். ஆனால் அதைத் தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன. இந்தப் படம் பெரும் விவாத பொருளை உண்டாக்கும் என்பதில் எந்தவித மாறுபாடும் இல்லை'' என்றார் இயக்குநர். கொடைக்கானல் வனப்பகுதியில் பெரும்பான்மையான படப்பிடிப்புகள் நடந்துள்ளன.

More from the section

அரசு பள்ளியை தரம் உயர்த்தும் இளைஞர்கள்
இசையறிஞர் ப. முத்துக்குமாரசாமி நினைவாக... இசையோடு வாழ்வு!
மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகள்!
என்றும் இருப்பவர்கள்!
சிதைவின் விளிம்பில் சித்தன்னவாசல்!