புதன்கிழமை 17 ஜூலை 2019

நடிகர் சவால்

Published: 07th July 2019 01:20 PM


"திருடன் போலீஸ்', "உள்குத்து' படங்களைத் தொடர்ந்து கார்த்திக் ராஜூ எழுதி இயக்கி வரும் படம் "கண்ணாடி'. சந்தீப் கிஷன், அன்யா சிங், கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜி சுப்ரமணியன் தயாரிக்கிறார். படம் குறித்து சந்தீப் கிஷன் பேசும் போது.... ""டீஸர் பார்த்தவர்கள் எல்லோரும் பாராட்டினார்கள். 2 வருடத்துக்கு ஒரு படம் என நடித்துக் கொண்டிருக்கிறேன். பார்வையாளர்களை மகிழ்விக்கவே படம் நடிக்கிறேன்.  ஆனால் இப்பொழுது படம் நடிப்பது என்றால் பயமாக இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு படமும் வெளியிடுவதற்குப் பெரும் போராட்டம் எழுந்துள்ளது. 

ஒவ்வொருவரும் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். தரமான படமாக வரவேண்டும் என்பதற்காகக் கடினமாக உழைத்திக்கிறோம். இப்படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே இப்படத்தை எடுத்திருக்கிறோம். "மாயவன்' படத்தை ஆன்லைனில் பார்த்த பலரும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். இதன் பிறகு "கசடதபற' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்படம் வெளியாகும்போது எல்லோராலும் பேசப்படும் படமாக இருக்கும். இப்படத்தில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கதையின் அடிப்படை மாறும். எதிர்காலத்தில் ஆரம்பித்து நிகழ்காலத்தில் முடியும். இதுவரை 24 படங்களில் நடித்திருக்கிறேன். இப்படத்தைப் பார்த்து முடித்ததும் இது பேய் படம் என்று யாராவது கூறிவிட்டால் இனிமேல் நடிப்பதையே விட்டுவிடுகிறேன்'' என்றார் சந்தீப் கிஷன்.

More from the section

அரசு பள்ளியை தரம் உயர்த்தும் இளைஞர்கள்
இசையறிஞர் ப. முத்துக்குமாரசாமி நினைவாக... இசையோடு வாழ்வு!
மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகள்!
என்றும் இருப்பவர்கள்!
சிதைவின் விளிம்பில் சித்தன்னவாசல்!