20 ஜனவரி 2019

மரைன் பயாலஜி பல்கலைக்கழகங்கள்!

By - எம்.அருண்குமார்| DIN | Published: 11th September 2018 08:00 PM

பயாலஜி என்பது உயிரினங்கள் சம்பந்தமான படிப்பாகும்.  அதில் மரைன்  பயாலஜி என்பது கடல்வாழ் உயிரினங்கள் சம்பந்தமான படிப்பாகும்.    சிறிய செடிகள், மீன்கள் முதல் பெரிய திமிங்கலம் வரையில் கடலில் வாழும் உயிரினங்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்வதற்கு மரைன்  பயாலஜி படிப்பு உதவியாக உள்ளது.  மரைன்  பயலாஜி படித்தவர் மரைன்  பயாலஜிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார்.  

இதில் பட்டயப்படிப்பு தொடங்கி இளங்கலை, முதுகலை, எம்.பில், பி.எச்டி ஆகிய படிப்புகள் உள்ளன.  இதைப் படித்தவர்கள் அந்த படிப்பு சம்பந்தமான கல்லூரி, பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர், பேராசிரியராகும் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.  அதோடு மட்டுமல்லாமல் ஆராய்ச்சியாளராகவும் பணிபுரியவும் வாய்ப்புகள் உள்ளன. 

மேலும் கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் அமைப்புகள், கடல் வாழ் உயிரினங்களைக் கொண்டு கண்காட்சி நடத்தும் நிறுவனங்களிலும்  வேலை வாய்ப்புகள் உள்ளன.

மரைன் பயாலஜி படிப்புகளை நடத்தும் பல்கலைக்கழகங்கள் :

Cochin University of Science and Technology - http://www.cusat.ac.in/research_activities.php
Andhra University  -http://andhrauniversity.edu.in/coursesoff.html
Annamalai University - http://annamalaiuniversity.ac.in/T00_info.php?fc=T00
Pondicherry University - http://www.pondiuni.edu.in/department/department-oceanstudies-and-marine-biology Veer Narmad South Gujarat University -  http://www.vnsgu.ac.in/

 

More from the section

பிளாஸ்டிக் பைக்கு மாற்று "ரிஜெனோ' பை!
விண்கல பூமியில் 54 இளம் மாணவ விஞ்ஞானிகள்!
வேலை...வேலை...வேலை...
உன்னத உறவே நட்பு! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.
உணவு பதப்படுத்துதலில் பொறியியல் படிப்புகள்!