புதன்கிழமை 17 ஜூலை 2019

வேலை வாய்ப்புகளை வழங்கும் தடய அறிவியல்!  

DIN | Published: 09th July 2019 11:46 AM

புதிய புதிய படிப்புகள் ஆண்டுதோறும் கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. எல்லா படிப்புகளின் நோக்கமும் நல்லதொரு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதுதான். அந்த வகையில் ஃபாரன்சிக் சயின்ஸ் வேலைவாய்ப்பை வழங்கும் கல்வியாக உருவெடுத்துள்ளது. 
குற்றப் புலனாய்வு நடவடிக்கையிலும், அதைத் தொடர்ந்த விசாரணைகளிலும் ஒரு முக்கிய அம்சமாக ஃபாரன்சிக் சயின்ஸ் உள்ளது.
குற்றங்களின் உணமையான தன்மையைக் கண்டறிந்து புலனாய்வு செய்யவும், அது சரியானதுதானா? எனக் கண்டறியவும், ஃபாரன்சிக் சயின்ஸ் கல்வி கைகொடுக்கிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் நிகழும் பல்வேறு குற்றப் பின்னணியை அறிவியல்ரீதியாக அணுகுவதற்கு தேவையான ஃபாரன்சிக் அறிவியல்துறை நிபுணர்கள் போதிய அளவில் இல்லை என்பதால், இத்துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு உள்ளது.
ஃபாரன்சிக் அறிவியலைப்பொருத்தவரை இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரண்டிலுமே ஃபாரன்சிக்அறிவியலை எடுத்துப் படிக்க வேண்டும். அப்போதுதான் சிறிய விஷயங்களைக் கூட தெளிவாக புலனாய்வு செய்ய முடியும். 
இளநிலைப் படிப்பில், DNA profiling, gel electrophoresis, fingerprints and document examinations, image processing, voice analysis, knowledge of toxicology, serology, ballistics, physis, chemistry, and cyber crime போன்ற வகைகள் உள்ளன.
மேலும், அந்தப் படிப்பில் சிறப்பு நிபுணத்துவம் பெறவும் முடியும். உதாரணமாக, மருத்துவம் சார்ந்த forensic serology துறையில், ரத்தத்தின் இயல்புத் தன்மை குறித்தும், கறை உள்ளிட்டவை குறித்தும் அறிந்து கொள்ள முடியும். 
இன்றைய காலகட்டத்தில், ஒரு குற்றம் குறித்த நிலவரத்தைத் தெரிந்து கொள்ள காவல்துறையினர், 
ஃபாரன்சிக் அறிவியல் நிபுணர்களின் உதவியை நாடுகிறார்கள். இதன்மூலம், அதுபோன்ற குற்றங்கள், தொடர்ந்து நிகழாத வண்ணம் தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை Proactive forensic என்று அழைக்கப்படுகிறது. இதன்மூலம், குற்றச் செயல்கள் குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன. 
குண்டு வெடிப்பு, டி.என்.ஏ. வகைகளை அடையாளம் கண்டறிதல், பேசுபவரின் குரலைப் புரிந்து கொண்டு கண்டறிதல், ஆவணங்கள், முக்கிய உத்தரவுகளில் இடப்பட்டுள்ள கையெழுத்தினை அடையாளம் கண்டறிதல், நச்சுத் தன்மை கண்டறிதல் ஆகியவை ஃபாரன்சிக் அறிவியலைக் கற்றவருக்கே சாத்தியம். 
இவற்றை எல்லாம் கைதேர்ந்த ஃபாரன்சிக் அறிவியல் நிபுணர் கண்டுபிடித்து , காவல்துறைக்கு உதவ முடியும். இந்தியாவில், ஃபாரன்சிக் அறிவியல் தொடர்பான இளநிலைப் படிப்பில், ஸ்பெஷலைசேஷன் பிரிவுகள் இல்லை. முதுநிலைப் படிப்பை படித்தால் மட்டுமே நிபுணராகப் பரிணமிக்க முடியும். 
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும், ஃபாரன்சிக் அறிவியல் துறையிலும், எண்ணற்ற வேலை வாய்ப்புகள் நிறைந்துள்ளன. National investigation agency, CBI, Intelligence Bureau, Central / State police departments, Centre forensic science laboratory and State forensic science laboratory போன்ற அரசுத் துறைகளில், சிறப்பான பணி வாய்ப்புகள் உள்ளன.
மேலும், hospitals, banks, universities, defence/ army units, quality control bureau, Narcotics department, Judicial services, Forest and wild life departments போன்ற இடங்களிலும் பணி வாய்ப்புகள் நிறைந்துள்ளன. 
B.Sc. Forensic Science 3 வருட படிப்பாகும்.
இதில் உயிரியல், வேதியியல், சட்டம் மற்றும் தடயவியல் குறித்த படிப்பு தியரியாகவும், பிராக்டிகலாகவும் கற்றுத் தரப்படும். இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு Medical Examiner, Laboratory Analyst, Forensic Auditor, Forensic Executor, Investigative  officers, Legal counselors, Forensic Expert, Forensic Scientist, Crime Scene Investigator, Teacher / Professor, Crime Reporter, Forensic Engineer, Law Consultant, Handwriting Expert என பல்வேறு நிலைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. 12ஆம் வகுப்பில் உயிரியல் அல்லது லைப் சயின்ûஸ ஒரு பாடமாகக் கொண்டு 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் இதில் சேர முடியும்.
சொந்தமாகவும் கன்சல்டன்சி வைத்தும் மற்ற டிடெக்டிவ் ஏஜென்சிகளுடன் இணைந்தும் சம்பாதிக்கலாம். 
வி.குமாரமுருகன்

More from the section

மன்னனும்... மாணவர்களும்!
கணினிக்கு ஓர் இணையதளம்!
கட்டுமானத் தொழில்; இளைஞர்களுக்கு பயிற்சி!
ஒப்பீடு!
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 200 - ஆர்.அபிலாஷ்