வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

இந்திய வீராங்கனைகளில் அதிக சம்பளம் வாங்குபவர்..?

DIN | Published: 29th August 2018 11:13 AM

சர்வதேச விளையாட்டுத் துறையில் அதிக வருமானம் ஈட்டுபவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீராங்கனைகளில் முதல் பத்து பேரில் எட்டு பேர் டென்னிஸ் விளையாட்டைச் சேர்ந்தவர்கள். முதல் இடத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக பிடித்திருப்பவர் வேறு யாருமில்லை. டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ். இவரது ஆண்டு வருமானம் 120 கோடி.
 இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்திருப்பவர் இறகுப் பந்தாட்ட வீராங்கனை பி. வி. சிந்து. சிந்துவின் ஆண்டு வருமானம் சுமார் அறுபது கோடி. இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் வீராங்கனையும் சிந்துதான்.
 "உலகப் பட்டியல் ஒன்றில் இந்தியாவிலிருந்து எனது பெயர் மட்டும் இடம் பெறுவது மகிழ்ச்சியைத் தரும் விஷயம்தானே... எனக்கு வருகிற வருமானம் நேராக வங்கிக் கணக்கிற்குப் போய்விடும்'' என்கிறார் சிந்து. இருபத்துமூன்று வயதாகும் சிந்து இறகுப் பந்தாட்டத்தில் சர்வதேச தர வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். சிந்துவின் வருமானம், புகழ் குறித்த செய்திகள், இறகுப் பந்தாட்டம் பக்கம் இளம் பெண்களை ஈர்க்கும்..! ஈர்க்கவும் தொடங்கியிருக்கிறது..!
 - பனிமலர்
 

More from the section

இதுபுதுசு
பொது நல வழக்குகளின் தாய்! 
பரதத்திலிருந்து கிரிக்கெட்டுக்கு...
நீரிழிவும் உடற்பயிற்சியும்!
கிளிஞ்சல்களும் காசாகலாம்!