புதன்கிழமை 16 ஜனவரி 2019

டிப்ஸ்.. டிப்ஸ்...

By - சி.பன்னீர்செல்வம்| DIN | Published: 12th September 2018 06:51 PM

 

கேரட்டை   அரைத்து மோரில் கலந்து  அடிக்கடி சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும்.


கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணிப்பழம் ஆகியவை சாப்பிட்டு வந்தால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும்.


பொன்னாங்கண்ணி கீரையுடன் வெள்ளைப் பூண்டு கலந்து சாப்பிட சர்க்கரை நோய் இருக்காது.


கேசரி செய்யும் போது நீரின் அளவைக் குறைத்து அதிக அளவு பால் கலந்து செய்து பாருங்கள். கேசரி நல்ல மணத்துடன் பால்வாசனையுடன் மாறுதலான சுவையுடன் இருக்கும்.


மிளகு ரசத்திற்கு குழைவாக வெந்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.


கீரை பயத்தம் பருப்பு கூட்டு செய்யும்போது ஒரு கப் பாலை விட்டால் மணமாக இருக்கும்.


திராட்சை ரசத்தை தேனுடன் கலந்து உணவிற்குப்பின் சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் குணமாகும்.


மாம்பழச்சாற்றுடன் கேரட்சாறும் கலந்து அருந்த சிறுநீர் வழிகள் தூய்மை அடையும். தோல்நோய்கள் மறையும். முகப்பரு மறையும்.


அவரைக்காய் விதைகளை அரைத்து முகத்தில் பூசி வர முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளப்பளக்கும்.


தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பஎண்ணெய் இவைகளை சம அளவில் கலந்து வலியுள்ள மூட்டுகள் மேல் பூசி லேசாகத் தேய்த்து விட்டால் மூட்டு வலி குணமாகும்.


தினமும் சுத்தமான தேனுடன் பேரிச்சம் பழம் கலந்து குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.


நல்லெண்ணெய்யில் வேப்பம் பூ போட்டு தலைக்கு தேய்த்துக் குளித்தால் பொடுகெல்லாம் போய்விடும்.


பீர்க்கங்காய் இலையை அரைத்துப் பூசி குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும்.


வயிற்று வலிக்கு பச்சை வெங்காயத்துடன் உப்பு கலந்து சாப்பிட குணமாகும்.


ஒரு லிட்டர் நல்லெண்ணெய்யில் 35 கிராம் சீரகத்தை பொடித்து சேர்த்துக் காய்ச்சி வாரம் இருமுறை நீராடினால் பித்தம், மயக்கம், தலைச்சுற்றல், தலைவலி, ஒற்றைத்தலைவலி நீங்கும்.


(பயனுள்ள வீட்டு குறிப்புகள்-நூலிலிருந்து )

More from the section

முதல் மருத்துவர்!
இது புதுசு
மேடையைக் கலக்கும் வைஷ்ணவி..!
கூந்தல் படைத்த உலக சாதனை..!
ஆசியாவின் அதிவிரைவு வீராங்கனை!