வியாழக்கிழமை 21 மார்ச் 2019

நினைவுச் சுடர் ! மனோ தர்மம்!

Published: 17th November 2018 10:00 AM

அருட் பிரகாச வள்ளலார் ஸ்ரீ இராமலிங்க வள்ளலார் தோற்றுவித்தது "சத்திய ஞான சபை!' இந்த திருச்சபைக்குள் சென்று வழிபாடு செய்ய விரும்புபவர்கள் சைவ உணவு மட்டுமே உண்பவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி. இந்த விதியை தன் கைப்படவே எழுதி கல்வெட்டில் பொறிக்கச் செய்தார் வள்ளலார். ஜீவகாருண்யத்தை ஜீவாதாரமாக கொண்டு காலமெல்லாம் வலியுறுத்தி வந்தார் இராமலிங்க வள்ளலார்.
 இச்சபையின் முக்கியப் பொறுப்பில் இருந்தார் திரு ஊரன் அடிகள். ஒரு முறை பெரியார் ஈ,வே.ராமசாமி அவர்களை சத்திய ஞான சபையை பார்வையிட அழைத்திருந்தார் ஊரன் அடிகள். அழைப்பை ஏற்ற பெரியார் சபையைப் பார்வையிடச் சென்றார்.
 அங்கு சபையின் நுழைவாயிலில் பொறிக்கப்பட்டிருந்த வாசகத்தைக் கண்டார் பெரியார்.
 "நான் இந்த சத்திய ஞான சபையின் உள்ளே வரத் தகுதியுள்ளவன் அல்ல!...'' என்று கூறி சபையை வெளியிலிருந்தே பார்வையிட்டார்.
 நாத்திகராயிருந்தாலும் பெரியாரின் பெருந்தன்மையை அங்குள்ளோர் வியந்து போற்றினர்.
 க.வேங்கடராமன். சென்னை.

More from the section

கூழாங்கல்
கதைப் பாடல்: சிறுமிகளின் அரிய செயல்!
வீரன் வந்தான்: பாராட்டுப் பாமாலை!  - 36
முத்துக் கதை!:  கடவுளின் கருணை
கருவூலம்: மிக நீளமான "போகிபீல்' பாலம்!