வியாழக்கிழமை 21 மார்ச் 2019

கடி

DIN | Published: 17th November 2018 10:00 AM

* அந்த மொபைல் போன் கடையிலே எதுக்கு பூச்சி மருந்து அடிக்கிறாங்க!''
"கடை பூராவும் ஒரே செல்லா இருக்கில்லே!''
டி.கே.சுகுமார், கோயம்புத்தூர்

* "அடிக்கிற கைதான் அணைக்கும்!''
"எப்படி சொல்றே?''
"கணக்குல சைபர் மார்க் வாங்கினதுக்கு, நேத்து ராத்திரி எங்கப்பா எனக்கு ரெண்டு அடி குடுத்துட்டு லைட்டை அணைச்
சிட்டார்!''
ஆர்.யோகமித்ரா, 
செம்பாக்கம்.

* "எங்க பாட்டி படிக்கும்போது கண்ணாடி போட்டுப்பாங்க..... உங்க பாட்டி?''
"உங்க பாட்டி படிக்கும்போது எங்க பாட்டி ஏன் கண்ணாடி போட்டுக்கணும்?''
டி.மோகன்தாஸ், 
95ஏ, காமராஜபுரம், 
நாகர்கோயில் -629001

* "இந்த கோகுல்நாத் எப்பவும் கூகுள்லே எதையாவது தேடிக்கிட்டே இருக்கான்!''
"அப்ப கூகுள் நாத்னு சொல்லு!''
வி.ரேவதி, தஞ்சாவூர்.

* "அம்மா!....சூடான சாம்பார் பாத்திரத்திலே சுட்டுக்கிட்டேன்!''
"அடாடா!....அழாம எப்படிடா வலியைப் பொறுத்துக்கிட்டே?''
"நீ வீட்டிலே இல்லேன்னு நினைச்சிக்கிட்டேம்மா!''
எம்.அசோக்ராஜா, 
3/14ஏ, அரவக்குறிச்சிப்பட்டி, 
அசூர் - 620015

* "எங்க ஸ்கூலுக்கு புதுசா ரெண்டு வாத்தியாருங்களை நினைச்சா பயம்மா இருக்குடா!....''
"ஏன்?''
"ஒருத்தர் பேரு செங்குட்டுவன்!....இன்னொருத்தர் பேரு கிள்ளி வளவன்!...''
ஜி.மஞ்சரி, 
கிருஷ்ணகிரி
வாரம் 2 டி-சர்ட் பரிசு நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.


 

More from the section

அரங்கம்:  ஞாபகம்!
மரங்களின் வரங்கள்!: மருத்துவ பொக்கிஷம் - பாதிரி மரம்
கடி
விடுகதைகள்
கூழாங்கல்