வியாழக்கிழமை 21 மார்ச் 2019

கடி

DIN | Published: 08th September 2018 10:00 AM

""என் நாய் தினமும் நியூஸ் பேப்பரைக் கவ்விக்கொண்டு வரும்!....''
""இது என்ன பெரிய விஷயமா?''
""பேப்பர் அடுத்த வீட்டுக்காரருடையதாச்சே!....''

எம்.அசோக்ராஜா, அசூர் -620015.

 

""சாதாரண ஆசிரியர், தலைமை ஆசிரியரா ஆகணும்னா என்ன செய்யணும்?...''
""தலைக்கு மை தடவிக்கணும்!...''

டி.கே.சுகுமார், குனியமுத்தூர். 

 

""ஸ்பூனை ஏண்டா ரெண்டா உடைச்சே? ''
""டாக்டர் அரை ஸ்பூன் மருந்து 
சாப்பிடச் சொன்னாரு!...''

க.கண்ணுச்சாமி, ஈரோடு.

 

""என் நாய் தொலைந்து விட்டது!''
""எதாவது அடையாளம் சொல்லுங்களேன்...''
""அது என்னைப் பார்த்தா வாலாட்டும்!...''

ஜோ. ஜெயக்குமார், நாட்டரசன் கோட்டை.

 


""பரீட்சையில் தெரிந்த கேள்வியை எல்லாம் முதலில் எழுதணும்....தெரியாத கேள்வியை கடைசியில் எழுதணும்!...''
""பதிலை எல்லாம் எப்போ சார் எழுதணும்?''

டி.மோகன்தாஸ், நாகர்கோவில் - 1.

 


""என்ன சார்!....உங்க வகுப்பிலே ஒரு மாணவனைக் கூடக் காணோம்!''
""இன்னிக்கு , "லீவு லெட்டர் எப்படி எழுதறது'ன்னு சொல்லிக் கொடுத்தேன்....எல்லோரும் லீவு லெட்டர் எழுதிக் குடுத்துட்டு வீட்டுக்குப் போயிட்டாங்க!....''

க.சரவணகுமார்,

More from the section

கூழாங்கல்
கதைப் பாடல்: சிறுமிகளின் அரிய செயல்!
வீரன் வந்தான்: பாராட்டுப் பாமாலை!  - 36
முத்துக் கதை!:  கடவுளின் கருணை
கருவூலம்: மிக நீளமான "போகிபீல்' பாலம்!