திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

கண்ணன் துதி!

By - மகாகவி சுப்பிரமணிய பாரதியார்| DIN | Published: 08th September 2018 10:00 AM

 

காயிலே புளிப்பதென்னே கண்ண பெருமானே!-நீ
கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே!

நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே!-நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே?கண்ண பெருமானே!

காற்றிலே குளிர்ந்ததென்னே?கண்ண பெருமானே!-நீ
கனலிலே சுடுவதென்னே? கண்ண பெருமானே!

சேற்றிலே குழம்பலென்னே? கண்ண பெருமானே!
திக்கிலே தெளிந்ததென்னே? கண்ண பெருமானே!

ஏற்றிநின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே!நீ
எளியர்தம்மைக் காப்பதென்னே? கண்ண பெருமானே!

போற்றினோரைக் காப்பதென்னே!கண்ண பெருமானே!நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே?கண்ண பெருமானே!

போற்றி!போற்றி!போற்றி!போற்றி!
கண்ண பெருமானே!-நின்

பொன்னடிகள் போற்றி நின்றேன்
கண்ண பெருமானே!    

 

More from the section

 அங்கிள் ஆன்டெனா
வேட்டி சட்டை!
கடவுள் இருக்கும் இடம்!
விடுகதைகள்
பிஞ்சுக் கை வண்ணம் - II