வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

ஞானக்கிளி! - 17: இயற்கையின் நண்பன்! 

By பூதலூர் முத்து| DIN | Published: 08th September 2018 10:00 AM

ஞானம் வந்து அமர்ந்தது. 
பாத்திமா ஆவலோடு கையை உயர்த்தினாள். 
""மேடையில் ஒரு நாடகம் நடக்குது....நடிகர்களுக்குப் பின்னால்....அது என்ன இடம்?...காடா...மலையா...ஆற்றுப் பகுதியா....கிராமமா....நகரமா....என்று தெரியணும்....அதற்காகச் செயற்கையான பொருள்களோ ஓவியமோ இருக்கும்!....வெறும் வெள்ளைத் துணியோ ஒரு சுவரோ மட்டும் இருந்தா என்னாகும்?.....அது நாடகமாகவே 
இருக்காது...
அதே போலத்தான் இந்தப் பூமிக்கும், மனிதர்களுக்கும், விலங்குகள், பறவைகளுக்கும் மரங்கள் என்ற ஆதாரம் தேவை....மரங்கள் இல்லேன்னா நம் வாழ்வு பாலைவனம் போல வறண்டு போகும்....
""நீ சொன்னது நல்ல கருத்து!...'' ஞானம் பாராட்டியது. 
""அக்கா!....மனிதர்கள் வாழும் இடத்தை வைத்துக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் வறண்ட பூமியைப் பாலை என்றும் சொல்வோமே...''
நான் இருப்பது குறிஞ்சி'' என்றது ஞானம். 
""நாங்கள் இருப்பது...?''
அவரவரும் விழித்தார்கள்...மனத்தில் சாலையில் ஓடும் வாகனங்களும்,...தண்டவாளத்தில் ஓடும் ரயில்களும்,....மக்கள் கூட்டமும் மட்டுமே தோன்றின!
""நன்றாகச் சிந்தித்து இன்னொரு நாளில் சொல்லுங்கள்...'' 
பீட்டர் எழுந்தான். ""எங்கள் பள்ளிச் சுவரில் பூங்குழலி என்ற மாணவி ஒரு மரத்தின் ஓவியம் வரைந்தாள். 50 ஆண்டுகள் வாழும் ஒரு மரத்தின் மதிப்பு ரூபாய் 50 லட்சம் என்று தலைப்பு!''
ஞானம் கேட்டது. ""ஒரு மரத்தின் மதிப்பு ஐம்பது லட்சமா?''
""மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் உயிர்வாழ அடிப்படையே உயிர்வளி (ஆக்ஸிஜன்) தானே? ஐம்பது ஆண்டுகள் வாழும் ஒரு மரம் வெளியிடும் உயிர்வளிய்ன் மதிப்பு மட்டும் ரூ 8.3 லட்சம்! 
வாயு மண்டலத்தில் உள்ள கரியமிலவாயுவை மரங்கள் உள்ளே இழுத்துக் காற்று மாசுபடுவதைத் தடுக்கின்றன. வேர்கள் மூலம் மண் அரிப்பைத் தடுக்கின்றன. சருகுகள் உரமாகின்றன. மலைப்பகுதிகளில் சருகுகளில் நீரைத் தேக்கி நீர்வளம் காக்கின்றன. மரங்கள் வெள்ள ஆபத்தைத் தடுக்கின்றன. ஒலியின் மூலம் ஏற்படும் மாசைத் தடுத்தல்....தூசியைத் தடுத்தல்....விலங்கு பறவைகளுக்குப் புகலிடம் தருதல்...உணவு தருதல்....நீராவிப் போக்கால் மழைவளம் தருதல்...நிழல் தருதல்...காய்கள், கனிகள் தருதல்....வேர்கள், பட்டைகள் உட்படப் பல மரங்களின் பாகங்கள் மருந்தாகப பயன்படுதல்....வீடு அலுவலகம் போன்றவற்றின் கதவுகள், தூண்கள், ஜன்னல்கள், இருக்கைகள், மேசைகள், நிலைப்பேழைகள் (பீரோ) எனப் பயன்பாடுகள்....மலர்களின் அழகு!...மரங்கள் உள்ள பகுதியில் அமைதியும், நிம்மதியும் தவழுதல் என இவற்றின் மதிப்பு ரூபாய் ஐம்பது லட்சம்! பூங்குழலி இவற்றையெல்லாம் எழுதி வைத்தாள்.
ஞானத்தின் முகம் மலர்ந்தது. ""இந்தத் தகவலைத் தர பூங்குழலி எடுத்த முயற்சியும் பாராட்டுக்கு உரியது. இயற்கையின் நண்பர்களான அதியமானையும் பூங்குழலியையும் ஒரு நாள் இங்கே அழைத்து வாருங்கள்...அவர்களை நாம் எல்லோரும் வாழ்த்துவோம்! பாராட்டுவோம்! ஞானத்தின் அறிவிப்பால் எல்லோரும் மகிழ்ந்தார்கள்!
கிளி வரும்...

More from the section

 அங்கிள் ஆன்டெனா
வேட்டி சட்டை!
கடவுள் இருக்கும் இடம்!
விடுகதைகள்
பிஞ்சுக் கை வண்ணம் - II