வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

நினைவுச் சுடர்!: குரு வந்தனம்!

By - நெ.இராமன், சென்னை.| Published: 08th September 2018 10:00 AM

ஒமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் அந்நாட்டு மன்னர் நமது முன்னாள் ஜனாதிபதியான சங்கர் தயாள் சர்மாவைத் தமது நாட்டிற்கு அழைத்திருந்தார். 
சங்கர் தயாள் சர்மாவை அவர் வரவேற்றது போல் ஒரு வரவேற்பை உலக வரலாற்றில் எந்த ஒரு ஜனாதிபதிக்கும் யாரும் அளித்திருக்க மாட்டார்கள், 
சங்கர் தயாள் சர்மாவால் சரியாக நடக்க இயலாது. சாய்ந்து சாய்ந்து நடப்பார். அதனால் மஸ்கட்டின் அரசர் விமானத்தின் படிக்கட்டில் ஏறிச் சென்று சங்கர் தயாள் சர்மாவின் கையைப் பிடித்து பத்திரமாக அழைத்து வந்தார். 
பத்திரிகைக்காரர்கள் மன்னரிடம், ""அமெரிக்க ஜனாதிபதி வந்தபோதுகூட நீங்கள் இவ்வளவு பெரிய ராஜ உபசாரம் தரவில்லை....இந்திய ஜனாதிபதிக்கு மட்டும் ஏன் இவ்வளவு மரியாதை?'' என்று கேட்டனர். 
அதற்கு மன்னர், ""அவர் இந்திய ஜனாதிபதி என்பதற்காக நான் இத்தனை பெரிய மரியாதை தரவில்லை. பூனாவில் நான் அவரிடத்தில் படித்த மாணவன்!...அவர் என் ஆசிரியர்!....அதனால்தான் இவ்வளவு மரியாதை!.....இந்த வாய்ப்புக்கு நான் மிகவும் பெருமைப் படுகிறேன்!...'' என்றார். 
இந்திய ஜனாதிபதியாக இருப்பதைவிட பெரிய உத்தியோகம் ஆசிரியராக இருப்பதுதான் என்பது எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விஷயம்!

More from the section

 அங்கிள் ஆன்டெனா
வேட்டி சட்டை!
கடவுள் இருக்கும் இடம்!
விடுகதைகள்
பிஞ்சுக் கை வண்ணம் - II