புதன்கிழமை 17 ஜூலை 2019

விடுகதைகள்

By -ரொசிட்டா| DIN | Published: 06th July 2019 02:55 PM

1. கள்ளனுக்குக் காவல், காவலுக்குத் தோழன்...
2. கொளுத்தும் வெயிலில் வெள்ளையன் விளைகிறான்...
3. வானத்திலும் தங்கியிருப்பான்... பூமியிலும் தங்கியிருப் பான்... இவன் யார்?
4. எத்தனை பேர் ஏறி அமர்ந்தாலும் சலிக்காத குதிரை...
5. நீரில் மூழ்கியவன் துள்ளித் திரிந்தான்... தரைக்கு வந்தவுடன் மூச்சை நிறுத்தினான்...
6. பாயோ கருப்பு, தூங்குவதோ வெள்ளையன்...
7. நம்மைத் தொட்டுச் செல்லும் இவனை நாம் தொட முடியாது...
8. ஆடாமல் அசையாமல் நின்றிருந்தாலும் நிறையப் பேருக்கு ஊருக்குச் செல்ல வழி காட்டுவான்...

விடைகள்

1. ஜன்னல்,  2. உப்பு
3. தண்ணீர், 4. திண்ணை
5.  மீன், 6.  தோசைக்கல், தோசை , 7.  காற்று
8.  வழிகாட்டி மரப் பலகை

More from the section

பிஞ்சுக் கை வண்ணம் - II
பிஞ்சுக் கை வண்ணம் - I
அங்கிள் ஆன்டெனா
எறும்புகள்!
மரங்களின் வரங்கள்!: பூவரசம் மரம்