வியாழக்கிழமை 21 மார்ச் 2019

 நன்மைகள் அடைந்தே தீரும்

By  முன்றுறையரையனார்| Published: 09th September 2018 03:03 AM

பழமொழி நானூறு
கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
 விழுமியோன் மேற்சென் றதனால் - விழுமிய
 வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
 தீண்டா விடுதல் அரிது. (பாடல்-62)
 சீகாழியின்கண் கட்டப்பட்டிருந்த யானையும், கருவூரின்கண் இருந்த சிறப்புடையவனாகிய கரிகாற்சோழனிடத்துச் சென்று அவனைக் கொண்டுவந்து அரசுரிமையை எய்துவித்ததால், சிறந்த பொருள்களை விரும்பினும் விரும்பாதொழியினும், அடைதற்குரியவாய் நின்ற நன்மைகள், அவனைஅடையாது நிற்றல் இல்லை. (க-து) தமக்கு வரவேண்டிய நன்மைகள் வந்தே தீரும். "உறற்பால தீண்டா விடுதல் அரிது' என்பது பழமொழி.
 

More from the section

சங்க இலக்கியமும் நால்வேதமும்!
சோழர்களின் வரலாற்று வெற்றிச் சின்னம்
திருமணத்திற்கு முன் மருத்துவ ஆய்வு
இந்த வாரம் கலாரசிகன்
 வணிக நண்பன் எமன்