24 மார்ச் 2019

பசிபிக் பெருங்கடலில் திங்களன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 

DIN | Published: 24th December 2018 03:19 PM

 

டாங்கா: பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டாங்கா தீவில் திங்களன்று  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பசிபிக் தீவில் உள்ள டாங்கோ பகுதியில் திங்கட்கிழமை காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது  ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியது. 

கடலில் இந்த நிலநடுக்கம் 100 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள முழுமையான பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.  

ஆனால் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Tags : pacific ocean earthquake effect tsunamai warning

More from the section

பாகிஸ்தான் தேசிய தினத்துக்கு மோடி வாழ்த்து: இம்ரான் வரவேற்பு
வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகள்: டிரம்ப் திடீர் வாபஸ்
அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு விவகாரம்: விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார் முல்லர்
ஆப்கன்: இரட்டை குண்டுவெடிப்பில் 3 பேர் பலி
போதிய ஆதரவு இல்லாமல் பிரெக்ஸிட் மசோதா தாக்கல் செய்யப்படாது: எம்.பி.க்களிடம் தெரசா மே திட்டவட்டம்