செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

இந்தோனேஷியாவுக்கு 1 மில்லியன் டாலர்கள் நிவாரணம்: கூகுள் நிறுவனம் சார்பில் சுந்தர் பிச்சை அறிவிப்பு

DIN | Published: 02nd October 2018 06:36 PM

 

இந்தோனேஷிய பேரழிவுக்கு கூகுள் நிறுவனம் சார்பில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று சுந்தர் பிச்சை அறிவித்தார். 

இந்தோனேஷியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஏற்பட்ட பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,234 - ஆக அதிகரித்துள்ளது. மேலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், இந்தோனேஷியாவுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிவாரணத்தொகையை கூகுள் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் என அதன் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்தார். 

மேலும், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பேரழிவு எங்களுக்கு மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே கூகுள் நிறுவனம் சார்பில் நிவாரணத்தொகையாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்று சுந்தர் பிச்சை ட்விட்டர் மூலமாக அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில் கூகுள் சார்பில் முன்னெச்சரிக்கை செயலி அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.  

Tags : Sundar Pichai google சுந்தர் பிச்சை கூகுள்

More from the section

சிரியாவில் இரட்டை குண்டுவெடிப்பு: 24 பேர் பலி 
இந்தியா தாக்கினால் நாங்களும் பதிலடி தருவோம்: இம்ரான் கான் திட்டவட்டம்
குல்பூஷணை உடனடியாக விடுவிக்க வேண்டும்: சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையீடு
இந்தியாவுக்கான தூதரைத் திரும்ப அழைத்து பாகிஸ்தான் ஆலோசனை
பிரிட்டன் தொழிலாளர் கட்சியிலிருந்து 7 எம்.பி.க்கள் விலகல்