வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

ஆள் மாறும் 'அலிபாபா' நிர்வாகம்: அடுத்தது என்ன? எதிர்பார்ப்பில் சீனா 

DIN | Published: 10th September 2018 04:01 PM

 

பீஜிங்: சீனாவின் மிகப்பெரிய இ.காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் செயல் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அதன் நிறுவனரான ஜாக் மா அறிவித்துள்ளார்.

அலிபாபா என்பது சீனாவின் மிகப்பெரிய இ.காமர்ஸ் நிறுவனமாகும். இதனை நிறுவியவர் ஜாக் மா (54). சீனா மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இவர் தனது வியாபார முதலீடுகளைச் செய்துள்ளார். அத்துடன் உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் இவர் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் அலிபாபாவின் செயல் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அதன் நிறுவனரான ஜாக் மா திங்களன்று  அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பு ஹாங்காங்கில் இருந்து வெளிவரும் ஜாக் மாவுக்குச் சொந்தமான 'சவுத் சைனா மார்னிங் போஸ்ட்" என்னும் நாழிதழில் திங்களன்று வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

அலிபாபாவின் செயல் தலைவர் பொறுப்பிலிருந்து ஜாக் மா அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளார். அவருக்கு அடுத்தாக அந்த பதவிக்கு, நிறுவனத்தின் தற்போதையய தலைமைச் செயல் அதிகாரியான டேனியல் ஷாங் (46) தேர்நதெடுக்கப்பட்டுள்ளார்.   

டேனியல் ஷாங்  அலிபாபா நிறுவனத்தின் செயல் தலைவராக 10.09.2019 அன்று நியமிக்கப்படுவார். அதேசமயம் ஜாக் மா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருராகவும், அலிபாபா நிறுவனத்தின் நிரந்தர பங்குதாரராகவும் நீடிப்பார்.

இந்த செயல்பாடானது சுமுகமாக நடக்கும் பொருட்டு 2020-ஆம் ஆண்டு நிறுவன பங்குதாரர்கள் கூட்டம் நடைபெறும்வரை இந்த பொறுப்பில் ஜாக் மாவே தொடர்ந்து நீடிப்பார்.

இதுதொடர்பாக குழும ஊழியர்களுக்கு மா கடிதமொன்றையும் எழுதியுள்ளார். ஏற்கனவே அவரது ஓய்வு தொடர்பாக குழப்பமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில்,  அனைவருக்கும் தெளிவை உண்டாக்கும் பொருட்டு ஜாக் மாவின் பிறந்த தினமான திங்களன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.    

Tags : China ஓய்வு announcement retirement சீனா செயல் தலைவர் alibaba e.commerce jack ma executive chairman இ.காமர்ஸ் அலிபாபா ஜாக் மா

More from the section

இந்தியாவிடம் தெளிவான கொள்கை இல்லை: பாகிஸ்தான் குற்றச்சாட்டு
அமெரிக்க நிறுவனங்களின் சோதனைக்கூடம் இந்தியா: உலக வங்கி ஆலோசகர் தகவல்
டிரம்ப் - கிம் சந்திப்பு குறித்து வாஷிங்டனில் பேச்சுவார்த்தை
அமெரிக்க உளவுத்துறை மேற்பார்வை குழு உறுப்பினராக ராஜா கிருஷ்ணமூர்த்தி நியமனம்
அமெரிக்காவின் முக்கிய பதவிகளுக்கு 3 இந்திய-அமெரிக்கர்கள் பெயர் பரிந்துரை