செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

உயர் பாதுகாப்பு சிறையிலிருந்து 100 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியோட்டம்!

By DIN| IANS | Published: 11th September 2018 10:30 AM

 

பிரேசில், செப் 11: திங்களன்று பிரேசிலின் பரைபா மாகாணம், ஜாவோ பெசாயோ உயர் பாதுகாப்பு சிறையிலிருந்து ஒரே நேரத்தில் 100 கைதிகள் துப்பாக்கி முனையில் தப்பியோடிய செயல் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திங்களன்று முதலில் தப்பியோடிய 105 கைதிகளில் இருந்து 33 பேரை சிறைக்காவலர்கள் மீண்டும் கைப்பற்றியதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நான்கு வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் சிறைச்சாலைக்குள் திடீரென  நுழைந்த 20 பேர் கைகளில் ரைஃபிள்கள் வைத்திருந்ததோடு சிறைச்சாலையின் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்த பகுதியை நோக்கி வெடிபொருட்களை வீசி வெடிக்கச் செய்தனர்.

அவர்களைத் தடுக்க முயன்ற சிறைக்காவலர்களை சுட்டுத் தள்ளி விட்டு சிறைச்சாலையின் கதவை இறுக மூடி அவர்களுக்குத் தேவையான 105 கைதிகளை விடுவித்துக் கொண்டு சென்றனர். சிறைச்சாலைக்கு வெளியே தப்பியோடவிருக்கும் கைதிகளுக்காக காத்திருந்த அவர்கள் கூட்டத்தைச் சேர்ந்த மற்றொரு குழு சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடிபட்டிருந்த 36 வயதுக் காவலர் ஒருவரை தலையில் சுட்டுத் தள்ளியது.. உள்ளே கைதிகள் தப்பியதற்கும் வெளியில் காவலர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் ஒரே தீவிரவாதக் கும்பலே காரணமாயிருக்கக் கூடும் என சிறைத்துறை அதிகாரிகள் நம்பினர்.

உச்ச பட்ச கண்காணிப்பும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள சிறைச்சாலையிலேயே இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி அப்பகுதியில் உள்ள கல்லூரிகள், மருத்துவமனைகள் மூடப்பட்டன.

Tags : பிரேசில் கைதிகள் தப்பியோட்டம் 100 கைதிகள் தப்பியோட்டம் 100 inmates escape maximum-security prison Brazil

More from the section

ரஷ்ய கடல்பகுதியில் 2 எரிபொருள் கப்பல்கள் மோதி விபத்து: இந்தியர்கள் உட்பட 11 பேர் பலி 
பாகிஸ்தானில் லாரி மோதி பேருந்து எரிந்ததில் 27 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி
நேபாளத்தில் ரூ.100-க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய கரன்சிக்குத் தடை