20 ஜனவரி 2019

லிபியா: படகு விபத்தில் 100 அகதிகள் பலி

DIN | Published: 12th September 2018 01:01 AM


லிபியாவையொட்டிய கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழந்து விபத்துக்குள்ளானதில், 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக எல்லைகள் அற்ற மருத்துவர்கள்' அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறியதாவது:
சூடான், மாலி, நைஜீரியா, கேமரூன், கானா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து, ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடும் அகதிகளை ஏற்றிய இரு ரப்பர் படகுகள் லிபியாவிலிருந்து அண்மையில் புறப்பட்டது. அவற்றில் ஒரு படகில் ஓட்டை விழுந்து காற்று வெளியேறியதால் அது நீரில் மூழ்கியது. அதையடுத்து, அதிலிருந்த 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 276 பேர் மீட்கப்பட்டனர் என்று அந்த அமைப்பு தெரிவித்தது.
 

More from the section

சிலி கடல்பகுதியில் பயங்கர நிலநடுக்கம்
இந்திய அமெரிக்கருக்கு "ரோசா பார்க்ஸ்' விருது
தொழில்முனைவோர்களை ஊக்குவித்த இந்திய}நேபாள அரசுகள்
துளிகள்...
அரசுத் துறைகள் முடக்கம் குறித்து "மிக முக்கிய' அறிவிப்பு: டிரம்ப் உறுதி