புதன்கிழமை 19 டிசம்பர் 2018

ரூ.14.5 லட்சம் கோடி சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரி: டிரம்ப் மீண்டும் அதிரடி

DIN | Published: 19th September 2018 12:59 AM


சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 20,000 கோடி டாலர் (சுமார் ரூ.14.5 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்கள் மீது கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தனது வர்த்தக் கொள்கையில் சீனா குறிப்பிட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். எனினும், தனது மோசமான வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதற்குப் பதிலாக, அமெரிக்க விவசாயிகள், உழைப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான பதிலடி நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளது.
இதன் காரணமாக, தற்போது 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் 20,000 கோடி டாலர் மதிப்பிலான சீனப் பொருள்களுக்கு, அந்த வரி 25 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
வரும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் அந்த கூடுதல் வரி அமலுக்கு வரும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, 3,400 கோடி டாலர் மதிப்பிலான சீனப் பொருள்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், 20,000 கோடி மதிப்பிலான சீனப் பொருள்கள் மீது அமெரிக்கா கடந்த மாதம் 10-ஆம் தேதி 10 சதவீதம் கூடுதல் வரி விதித்து.
இந்த நிலையில் தற்போது டிரம்ப் அறிவித்துள்ள கூடுதல் வரி விதிப்பால் உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் வெடிக்கும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
 

More from the section

பாகிஸ்தான் பத்திரிகையில் பயங்கரவாதி ஹபீஸின் கட்டுரை: பத்திரிகையாளர்கள் கண்டனம்
மல்லையாவை திவாலானவராக அறிவிக்க கோரி வழக்கு
இந்திய பொறியாளரை விடுவித்தது பாகிஸ்தான்: 6 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார்
காஷ்மீர் வன்முறையை கண்டித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்
ஆமிர்கான் நிகழ்ச்சிக்கு இடம் தர சீனப் பல்கலை. மறுப்பு