24 மார்ச் 2019

பேஸ்புக் - ஆன்லைன் உலகின் டிஜிட்டல் கொள்ளைக் கும்பல்: பதற வைக்கும் பாராளுமன்றக் குழு அறிக்கை  

IANS | Published: 18th February 2019 05:10 PM

 

லண்டன்: பேஸ்புக் ஆன்லைன் உலகின் டிஜிட்டல் கொள்ளைக் கும்பல் போல் நடந்து கொள்கிறது என்று இங்கிலாந்து பாராளுமன்றக் குழு ஒன்றின் விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.  

இணையதளங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் போலிச் செய்திகள் குறித்து, 2017-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பாராளுமன்றத் தேர்வுக் குழு ஒன்று விசாரணையைத் துவங்கியது.

ஏறத்தாழ 18 மாத விசாரணைக்குப் பிறகு, டேமியன் காலின்ஸ் தலைமையிலான அந்த குழுவானது 108 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

அந்த குழுவானது கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை பேஸ்புக் நிறுவனத்தின் உள்ளே நடைபெற்ற மின்னஞ்சல் பரிமாற்றங்களை விரிவாக ஆய்வு செய்திருந்தது. அதில் இருந்து பேஸ்புக் நிறுவனமானது தொடந்து பயனாளர்களின் அந்தரங்க செய்திப் பரிமாற்றம் குறித்த அமைப்புகளை (செட்டிங்ஸ்), தனது சொந்த நலனுக்காக மீறியது தெரிய வந்தது. அதன் மூலம் பெரும்பாலான தகவல்கள் பல்வேறு விதமான  செயலி உருவாக்குபவர்களுக்கு (ஆப் டெவலப்பர்ஸ்) அளிக்கப்பட்டதும் தெரிய வந்தது.

இத்தகைய செயல்பாடுகளின் காரணமாக பேஸ்புக் ஆன்லைன் உலகின் டிஜிட்டல் கொள்ளைக் கும்பல் போல் நடந்து கொள்கிறது என்று இங்கிலாந்து பாராளுமன்றக் குழு விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.       

அத்துடன் பேஸ்புக் நிறுவனரான மார்க் ஸுக்கர்பெர்க்கையும் இந்த விசாரணை அறிக்கை குற்றம் சாட்டுகிறது.  விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட அழைப்பாணைகளை அவர் புறக்கணித்ததும் அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது. 

Tags : facebook England parlimentary panel enquiry report privacy fake news disinformation online digital gangster mark zuckerberg

More from the section

பாகிஸ்தான் தேசிய தினத்துக்கு மோடி வாழ்த்து: இம்ரான் வரவேற்பு
வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகள்: டிரம்ப் திடீர் வாபஸ்
அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு விவகாரம்: விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார் முல்லர்
ஆப்கன்: இரட்டை குண்டுவெடிப்பில் 3 பேர் பலி
போதிய ஆதரவு இல்லாமல் பிரெக்ஸிட் மசோதா தாக்கல் செய்யப்படாது: எம்.பி.க்களிடம் தெரசா மே திட்டவட்டம்