புதன்கிழமை 20 மார்ச் 2019

புல்வாமா தாக்குதல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

DIN | Published: 22nd February 2019 04:13 AM


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது.
வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா உள்பட 15 நாடுகள் உறுப்பினராக உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புல்வாமாவில் கடந்த 14ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40  வீரர்கள்  உயிரிழந்தனர்.  பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளது.
கண்டிக்கத்தக்க இந்தத் தாக்குதலுக்கு நிதியுதவி அளித்தவர்கள், ஏற்பாட்டாளர்கள் ஆகியோரை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும்.
இதற்கு, இந்திய அரசுக்கு உரிய ஒத்துழைப்பை உறுப்பு நாடுகள் அளிக்க வேண்டும்.

More from the section

எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து 3-ஆவது நாளாக அத்துமீறல்
நவாஸ் ஷெரீஃபின் ஜாமீன் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு
கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை
நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி: ஹைதி பிரதமர் ராஜிநாமா
மசூதி தாக்குதல் நடத்தியவருக்கு மிகக் கடுமையான தண்டனை: நியூஸிலாந்து பிரதமர் உறுதி