புதன்கிழமை 17 ஜூலை 2019

உலகின் மிகச் சிறிய குழந்தை: வெறும் 245 கிராம் எடையுடன் பிறந்து உயிர் பிழைத்த அதிசயம்

ENS | Published: 31st May 2019 03:58 PM


கலிஃபோர்னியா மருத்துவமனை நேற்று கோலாகலக் கொண்டாட்டத்துக்கு இணையாக கலகலப்பாகக் காணப்பட்டது.

காரணம் பிறந்து 5 மாதங்கள் ஆன குழந்தை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதைக் கொண்டாடத்தான் மருத்துவமனை ஊழியர்கள் தயாராகி வந்தனர். குழந்தையின் தலையில் பட்டதாரிகளுக்கான தொப்பியை அணிவித்து உலகின் மிகச் சிறிய குழந்தை என்று பட்டம் சூட்டப்பட்ட அந்த குழந்தை மகிழ்ச்சியோடு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த குழந்தைக்கு மருத்துவமனை ஊழியர்கள் வைத்த பெயர் சேபீ (Saybie). இந்த குழந்தை கருவில் உருவாகி 23வது வாரத்திலேயே சிசேரியன் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாயின் கருவறையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. 

பிறக்கும் போது வெறும் 245 கிராம் மட்டுமே இருந்தது.  ஒரு பெரிய சைஸ் ஆப்பிளின் எடைதான் அது. உயிர் பிழைக்கவே வாய்ப்பில்லை என்ற நிலையில்தான் சேபீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  5 மாதங்கள் கடந்துவிட்டன. தற்போது 2.2 கிலோ எடையுடன் ஆரேரக்கியமான குழந்தையாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறது சேபீ. 
 

More from the section

இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்எல்லையில் அனுமதி
இந்திய எல்லையில் கடத்தலை முழுமையாக தடுக்க இயலாது: வங்கதேச எல்லை பாதுகாப்பு படை
இந்தியாவில் 41,331 பாகிஸ்தானியர்கள் வசிக்கின்றனர்: மக்களவையில் தகவல்
குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
மீண்டும் அணுகுண்டு சோதனை?: வட கொரியா மறைமுக எச்சரிக்கை