ராதை, கிருஷ்ணரின் ஊரில் ஹோலி திருவிழா!

இணையதள செய்திப்பிரிவு

புது தில்லிக்கு 115 கிமீ தொலைவில் உள்ள பர்சானா மற்றும் நந்த்கோன் கிராமங்கள் புராதன கதையோடு தொடர்புடையன.

நந்த்கோன் கிராமம் கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படுகிறது. பர்சானா- ராதையின் ஊர்.

இரு கிராமத்தினரும் பங்கேற்கும் லத்மர் (ஹோலி) பண்டிகை செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் ராதையின் ஊருக்குள் நுழைந்து வண்ணம் பூச முற்பட்டனர்.

ராதை தன் தோழிகளோடு குச்சி வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். கிருஷ்ணரை குச்சி கொண்டே துரத்த தொடங்கியதாக புராதன கதை சொல்கிறது.

அதே போக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை போது இந்த இரு கிராமத்திலும் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

பர்சானா பெண்களும் நந்த்கோன் ஆண்களும் இந்த திருவிழாவில் தங்களை ராதை கிருஷ்ணராக பாவித்து கலந்து கொள்கிறார்கள்.

கிராமத்தினர் ஹோலி வண்ணங்களை ஒருவர் மீது ஒருவர் பூசிக் கொண்டாடுகிறார்கள். (படங்கள்: ஏபி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்