கோடை சுற்றுலா: 25 ஆயிரம் பட்ஜெட்டில் செல்லக் கூடிய நாடுகள்!

DIN

வெயில் காலத்தில் சுற்றுலா பயணத்திற்கு திட்டமிடும்போது வெளிநாடுகளை பட்ஜெட் கருதி பட்டியலில் இருந்து தவிர்த்திருப்போம். இப்போது திட்டமிட்டால் ஏப்ரலில் 25 ஆயிரத்துக்குள் செல்லக் கூடிய வெளிநாடுகள் இதோ.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், எழில் கொஞ்சும் இயற்கை நிரம்பியிருக்கும் ஸ்ரீலங்கா. முக்கியமாக பட்ஜெட் அதிகம் தேவைப்படாத நாடு.

ஹிமாலயா மலைகள், பராம்பரிய கலாச்சாரம், விருந்தோம்பல் என பயணத்தை அனுபவிக்க சிறந்த நாடு, நேபாளம்.

பலரின் பக்கெட் லிஸ்டில் இருக்கும் இடம் தாய்லாந்து- இரவு வாழ்க்கைக்கும் கொண்டாட்டத்துக்கும் பேர் பெற்றது.

பழமையான காலசாரம் மற்றும் நவீன சூழல் என விரிந்திருக்கும் வியட்நாம். பட்ஜெட் பாதிக்காத பட்டியலில் இந்த நாடும் உண்டு.

பல்வேறு கலாச்சாரங்களின் இணைவாக இருக்கும் சிங்கப்பூர் துடிப்புமிக்க நகரமும் கூட. பட்ஜெட் கொஞ்சம் கூடுதல். ஆனால் முன்கூட்டி திட்டமிட்டால் சென்று வரலாம்.

உலகத்தில் ஆடம்பரத்துக்கு புகழ்பெற்ற நாடுகளில் ஒன்று துபை. பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல் முன்கூட்டியே திட்டமிடலாம்.

உணவு வகைகள், மழைக்காடுகள், கடற்கரைகள், தீவுகள் என நிரம்பியிருக்கும் மலேசியா.

இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள நாடுகளில் ஒன்றான வங்கதேசம். இயற்கை எழில்கொஞ்சும் பயணமாக இது அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்