பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள 10 வழிகள்!

இணையதள செய்திப்பிரிவு

உடல் செரிமான பகுதியின் ஆரம்பாக பற்கள் இருப்பதால் உடல் ஆரோக்கியமும் அதிலிருந்து தொடங்குகிறது. பற்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய 10 வழிகள் இதோ.

நாளொன்றுக்கு இரு முறை பல் தேய்க்க வேண்டும். பற்களுக்கு இடையில் கிருமிகள் மற்றும் கரை தேங்கி இருக்கும். இரவு பல் தேய்த்தால் மட்டுமே அவை நீங்கும்.

முறையாக பல் தேய்க்க வேண்டும். வாயின் எல்லா புறமும் நிதானமாக வட்ட வடிவில் மென்மையாக நேரம் எடுத்து கொண்டு தேய்க்க வேண்டும்.

பற்களை சுத்தம் செய்யும்போதே நாக்கையும் மென்மையாக தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும். அதற்கான பிரத்யேக சாதனங்களையும் பயன்படுத்தலாம்.

ப்ளோரைடு உள்ளடங்கிய பற்பசை பயன்படுத்துவது நல்லது.

ஈறுகளுக்கு இடையில் செயற்கை இழை கொண்டு சுத்தம் செய்வது (ப்ளாஸ்ஸிங்) அவசியமானது.

வாய் கொப்பளியுங்கள். அதற்கான பிரத்யேக திரவங்கள் பயன்படுத்தலாம்.

அதிக நீர் அருந்த வேண்டும்.

மென்று உண்ணக்கூடிய உணவு வகைகளைச் சேர்த்து கொள்ளவும்.

இனிப்பு சத்துமிக்க மற்றும் அமில உணவுகளை அளவாக்கிக் கொள்ள வேண்டும்.

பல் மருத்துவரிடம் ஆண்டுக்கு இருமுறையாவது சோதனைக்கு செல்வது நல்லது. உலக வாய் சுகாதார தினம்- மார்ச் 20

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்