வீட்டில் வளர்க்க எளிதான 8 செடிகள்!

இணையதள செய்திப்பிரிவு

வீட்டில் செடிகள் வளர்ப்பது அழகுக்கு மட்டுமின்றி உடல்நலனுக்கும் நன்மை தரும். அப்படி வீட்டில் வளர்க்க எளிதான 10 செடிகள் இதோ.

அதிர்ஷடத்தைத் தரும் என நம்பப்படுகிற மனி பிளான்ட்டுக்கு கோடையில் 7-10 நாள்களுக்கு ஒருமுறையும் குளிர்காலத்தில் 2-3 வாரத்திற்கு ஒருமுறையும் நீர் விட்டால் போதுமானது.

காற்றை சுத்தப்படுத்தும் வெப்பமண்டல செடியான ஜுஜு பாலைவன தாவரம் என்பதால் 2-3 வாரங்களுக்கு ஒரு முறை நீர் விட்டால் போதுமானது.

நேரடியாக சூரியக்கதிர் படாத இடத்தில் இந்த பீஸ் லில்லி செடியை வளர்க்க வேண்டும். இந்த செடி பெயருக்கு ஏற்றாற்போலவே அமைதியைத் தரக்கூடியது.

சிலந்தியின் கால்கள் போல வளரக்கூடிய ஸ்பைடர் செடி குறைவான பராமரிப்பில் வளரக்கூடிய ஒன்று.

பார்ப்பதற்கு உள்ளங்கையை விரித்துவைத்தாற்போல இருக்கும் சிங்கோனியம் காற்றில் உள்ள நச்சுக்களை நீக்கக் கூடியது.

எப்போதும் பசுமை மாறாத ஸ்நேக் பிளான்ட்டுக்கு 10 நாளுக்கு ஒருமுறை நீர் விட்டால் போதுமானது. காற்றில் உள்ள நச்சின நீக்குவதுடன் சுத்தமான ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்யும்.

இலைகளே பூ போல வளரும் அம்பெரெல்லா பிளான்ட் வீட்டையே அழகு நிறைந்ததாக மாற்றும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்