வணக்கம், சிரி! ஐபோன் இயங்குதளத்தில் அறிமுகமாகும் புதிய வசதிகள்!!

DIN

ஆப்பிளின் அடுத்த பெரிய அப்டேட் அதன் இயங்குதளமான ஐஓஎஸ் 18 வெர்சன்தான். நிறைய புது விஷயங்களை ஆப்பிள் சேர்த்திருப்பதுடன் 9 இந்திய மொழிகளில் வசதிகளையும் கொடுக்கவுள்ளது.

ஐபோனின் லாக் ஸ்கீரின் கடிகாரத்தை 12 இந்திய மொழிகளில் மாற்றிக் கொள்ளலாம். அழைப்பவரின் முதலெழுத்து பெரிதாக தெரியும் அமைப்பையும் மாற்றிக் கொள்ள முடியும்.

ஐபோன்-12 மற்றும் அதற்கு பிந்தைய மாடல்களில் ஒரே நேரத்தில் ஆங்கிலம் மற்றும் இதர இரண்டு மொழிகளில் கீபோர்ட் வசதிகளை பெற முடியும். ஆங்கிலம், வங்காளம், ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த வசதி கொடுக்கப்படவுள்ளது.

11 இந்திய மொழிகளில் தட்டச்சு செய்யும் வசதி ஐஓஎஸ் 18-ல் அறிமுகமாகவுள்ளது.

அஸாமி, வங்காளம், தேவநாகரி மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகளில் தேடுதல் வசதி கொடுக்கப்படவுள்ளது.

முக்கியமான அப்டேட் எனச் சொல்ல வேண்டியது ஆப்பிளின் உதவியாளரான சிரி 9 இந்திய மொழிகளை புரிந்து கொள்ளவுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்த மொழிகள் கலந்து பயனர்கள் சிரி உடன் உரையாடலாம். வங்காளம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளை சிரி புரிந்துகொள்ளும்.

மொழிபெயர்ப்பு, சபாரி இணைய உலாவி மற்றும் இயங்குதளத்தில் ஹிந்திக்கான வசதி ஐஓஎஸ் 18 இல் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு