முதல் கட்ட தேர்தல்: சில சுவாரசிய தகவல்கள்!

DIN

மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

ANI

21 மாநிலங்களில் உள்ள 102 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப் பதிவில் 16.63 கோடி வாக்காளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ANI

1.87 லட்சம் வாக்குச் சாவடிகள் நாடு முழுவதும் தயார் நிலையில் உள்ளன. 18 லட்சத்துக்கும் அதிகமான அதிகாரிகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ANI

காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. (சில தொகுதிகளில் முடிவடையும் நேரம் மாறுபடலாம்)

ANI

முதல் முறை வாக்காளர்கள் 35.67 லட்சம் பேர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.

ANI

20 முதல் 29 வயதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 3.51 கோடி.

ANI

41 சுழலுர்திகள், 84 சிறப்பு ரயில்கள் மற்றும் 1 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.

ANI

50 சதவிகிதத்துக்கு அதிகமான வாக்குச் சாவடிகள் இணையவழி கண்காணிப்பில் உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ANI

361 பார்வையாளர்கள் ஏற்கனவே தொகுதிகளுக்கு சென்றுள்ளனர்.

ANI

4,627 பறக்கும் படை, 5208 புள்ளிவிவரங்கள் கண்காணிப்பு குழு, 2,028 விடியோ கண்காணிப்பு குழு மற்றும் 1,255 விடியோ பார்வைக் குழு பணியில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

(படங்கள்: ANI)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு