இன்று நல்ல நாள்!

மேஷம்இன்று தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றம் நடக்கும். உடன் பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

ரிஷபம்இன்று உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மிதுனம்இன்று இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கடகம்இன்று உங்களின் தரத்தை விட தீயோரோடு சகவாசத்தை குறைக்க வேண்டும். எனினும் தெய்வ அனுகூலத்தால் விடுபட்டு முன்னேற்றம் வந்து சேரும். உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்இன்று குருவின் பலத்தால் பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம். இருந்து வந்த தடைகள் அகலும். உங்கள் முயற்சிகளில் வெற்றியும், பொருளாதார வளமும் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் தேவைகள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கன்னிஇன்று பெண்களால் அனுகூலம் கிடைக்கும். மிகவும் உதவிகரமாக இருப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும். மாத பிற்பாதியில் புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கைகூடி வரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்இன்று உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர். வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7

விருச்சிகம்இன்று முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

தனுசுஇன்று எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது. தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்இன்று நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்னை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். சுய ஜாதகத்தில் திசாபுக்திகள் அனுகூலமற்றுயிருப்பின் தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கும்பம்இன்று நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மீனம்இன்று வாழ்க்கைத்துணை வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நல்ல வரன் கிடைக்கும். சந்தாண பாக்கியம் கிட்டும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...