இந்த வார ஓடிடி படங்கள்!

DIN

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

தெருக்கூத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஜமா திரைப்படம் அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி வெளியாகியுள்ளது.

ரிஷிகேஷ் நடிப்பில் பாலு சர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள உணர்வுகள் தொடர்கதை திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள நகைச்சுவை திரைப்படமான க்ர்ர்(Grrr) திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் காணலாம்.

வினோத் கிஷன், கீர்த்தி பாண்டியன் நடித்த கொஞ்சம் பேசினால் என்ன திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் பார்க்கலாம்.

சத்யராஜ் நடித்துள்ள 'மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்' என்ற வெப் தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு